• Nov 20 2024

பெரும் போகத்திற்ககான உர மானியம் வழங்குவதற்கான முதலாம் கட்டம் நிறைவு

Chithra / Nov 19th 2024, 11:26 am
image


விவசாயிகளுக்கு பெரும் போகத்திற்கான உர மானியங்களை வழங்குவதற்கான முதலாம் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.

அதன்படி, 23 மாவட்டங்களுக்கு 86,162 ஹெக்டயர் பயிர்ச்செய்கைக்கு உர மானியம் வழங்கப்பட்டுள்ளது. 

நாடளாவிய ரீதியில் 1,29,229 விவசாயிகளுக்கு சுமார் 1.29 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, பயிர்செய்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதன் அடிப்படையில், விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படும் என கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு கிரிதலை மற்றும் கௌடுல்ல நீர்த்தேக்கங்களில் இருந்து தாமதமாக நீர் திறந்து விடப்படுவதால் விவசாயிகளுக்கு இந்த மானியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பெரும் போகத்திற்ககான உர மானியம் வழங்குவதற்கான முதலாம் கட்டம் நிறைவு விவசாயிகளுக்கு பெரும் போகத்திற்கான உர மானியங்களை வழங்குவதற்கான முதலாம் கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.அதன்படி, 23 மாவட்டங்களுக்கு 86,162 ஹெக்டயர் பயிர்ச்செய்கைக்கு உர மானியம் வழங்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 1,29,229 விவசாயிகளுக்கு சுமார் 1.29 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பயிர்செய்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதன் அடிப்படையில், விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படும் என கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு கிரிதலை மற்றும் கௌடுல்ல நீர்த்தேக்கங்களில் இருந்து தாமதமாக நீர் திறந்து விடப்படுவதால் விவசாயிகளுக்கு இந்த மானியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement