• Oct 19 2024

மக்களை மோதவிட்டு அதில் குளிர்காயும் கடற்றொழில் அமைச்சர் - நா.வர்ணகுலசிங்கம் காட்டம்! SamugamMedia

Tamil nila / Feb 15th 2023, 3:57 pm
image

Advertisement

ஒவ்வொரு அமைச்சர்களும் தன்னிச்சையாக சர்வாதிகாரப்போக்கில் செயற்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூடுறவுச் சங்க சமாசத் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் காட்டமாக கருத்து வெளியிட்டுள்ளார்.


இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பிற்கு மீன்பிடிப்பதற்காக பாஸ் நடைமுறையை முன்னெடுக்கப்போவதாக வெளியான தகவலை தொடர்ந்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.


இலங்கையில் வடபகுதியை சேர்ந்த மீனவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாஸ் நடைமுறையை எவ்வாறு அரசாங்கம் நடைமுறைப்படுத்த போகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


இரண்டு இரும்புக்கப்பலை தருவதாகவும் எல்லை மீறி வருகின்ற இந்திய கப்பலை பிடியுங்கோ இடியுங்கோ என்று கடற்தொழில் அமைச்சர் கூறியதாகவும் இதனால் இந்திய மக்களும் வடபகுதி மக்களும் மோதும் 

நிலையை உருவாக்கிவிட்டு கடற்தொழில் அமைச்சர் அதில் குளிர் காய்வதாகவும் நா.வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.


இந்திய மீனவர்களுக்கு பாஸ் நடைமுறையை அறிமுகப்படுத்துவது என்றால் வடக்கு மாணாத்தில் உள்ள மீனவப்பிரதிநிதிகளை அழைத்து முதலில் கலந்துரையாட வேண்டும் என்றும் நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறு இல்லாம் தன்னிச்சையான முடிவுகளை அமைச்சர் எடுப்பாரானால் பாரிய போட்டங்களை முன்னெடுப்போம் என்றும் நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

மக்களை மோதவிட்டு அதில் குளிர்காயும் கடற்றொழில் அமைச்சர் - நா.வர்ணகுலசிங்கம் காட்டம் SamugamMedia ஒவ்வொரு அமைச்சர்களும் தன்னிச்சையாக சர்வாதிகாரப்போக்கில் செயற்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூடுறவுச் சங்க சமாசத் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் காட்டமாக கருத்து வெளியிட்டுள்ளார்.இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பிற்கு மீன்பிடிப்பதற்காக பாஸ் நடைமுறையை முன்னெடுக்கப்போவதாக வெளியான தகவலை தொடர்ந்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.இலங்கையில் வடபகுதியை சேர்ந்த மீனவர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாஸ் நடைமுறையை எவ்வாறு அரசாங்கம் நடைமுறைப்படுத்த போகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.இரண்டு இரும்புக்கப்பலை தருவதாகவும் எல்லை மீறி வருகின்ற இந்திய கப்பலை பிடியுங்கோ இடியுங்கோ என்று கடற்தொழில் அமைச்சர் கூறியதாகவும் இதனால் இந்திய மக்களும் வடபகுதி மக்களும் மோதும் நிலையை உருவாக்கிவிட்டு கடற்தொழில் அமைச்சர் அதில் குளிர் காய்வதாகவும் நா.வர்ணகுலசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்திய மீனவர்களுக்கு பாஸ் நடைமுறையை அறிமுகப்படுத்துவது என்றால் வடக்கு மாணாத்தில் உள்ள மீனவப்பிரதிநிதிகளை அழைத்து முதலில் கலந்துரையாட வேண்டும் என்றும் நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு இல்லாம் தன்னிச்சையான முடிவுகளை அமைச்சர் எடுப்பாரானால் பாரிய போட்டங்களை முன்னெடுப்போம் என்றும் நா.வர்ணகுலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement