தென்னிலங்கையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இவ்வாண்டின் இலங்கைக்கான தென் மேற்கு பருவ மழையின் முதலாவது உடைவது எதிர்வரும் 25ஆம் திகதியன்று நிகழவுள்ளது.
இந்நிலையில் அன்றையதினம் தென்மேற்குப் பருவ மழையின் முதற் சுற்றை காலி, மாத்தறை மாவட்டங்கள் எதிர்கொள்கின்றன.
எல்நினோ தெற்கு ஊசலாட்டம் நேர்மறையாக இருப்பதனால் தென்மேற்குப் பருவ மழையின் அளவு இவ்வாண்டு சராசரியை விட சற்று அதிகமாக இருக்கும். இவ்வாவாண்டின் தென்மேற்குப் பருவக்காற்று காலப்பகுதியில் 7-11 வரையான தடவைகளில் செறிவான அல்லது மிகச்செறிவான மழைச் சுற்றுக்களுக்கு வாய்ப்புள்ளது.
இம்முறையும் இலங்கையின் தென்மேற்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளை தூண்டக்கூடிய செறிவான மழை வீழ்ச்சி மே 25 முதல் ஜுன் 6, ஜுன் 11 முதல்24 , ஜூலை 9 முதல்18 , ஜுலை 23 முதல்30 , ஓகஸ்ட் 3 முதல் 15 வரையான காலப்பகுதிகளில் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஆகவே இலங்கையின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா,பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள மக்கள் தற்போதே செறிவான பருவ மழையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவர்களுக்கு எதிர்காலத்தில் வெள்ள மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்கும்.
அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழை தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அதேவேளை நாளையதினம்(16) கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இத் தாழமுக்கத்தினால் இலங்கையின் எந்த ஒரு பகுதிக்கும் எத்தகைய பாதிப்பும் கிடையாது. ஆயினும் எதிர்வரும் 23 வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் வெள்ளப்பெருக்கு அபாயம்; எதிர்கொள்ளத் தயாராகுமாறு மக்களுக்கு எச்சரிக்கை. தென்னிலங்கையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இவ்வாண்டின் இலங்கைக்கான தென் மேற்கு பருவ மழையின் முதலாவது உடைவது எதிர்வரும் 25ஆம் திகதியன்று நிகழவுள்ளது. இந்நிலையில் அன்றையதினம் தென்மேற்குப் பருவ மழையின் முதற் சுற்றை காலி, மாத்தறை மாவட்டங்கள் எதிர்கொள்கின்றன. எல்நினோ தெற்கு ஊசலாட்டம் நேர்மறையாக இருப்பதனால் தென்மேற்குப் பருவ மழையின் அளவு இவ்வாண்டு சராசரியை விட சற்று அதிகமாக இருக்கும். இவ்வாவாண்டின் தென்மேற்குப் பருவக்காற்று காலப்பகுதியில் 7-11 வரையான தடவைகளில் செறிவான அல்லது மிகச்செறிவான மழைச் சுற்றுக்களுக்கு வாய்ப்புள்ளது.இம்முறையும் இலங்கையின் தென்மேற்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளை தூண்டக்கூடிய செறிவான மழை வீழ்ச்சி மே 25 முதல் ஜுன் 6, ஜுன் 11 முதல்24 , ஜூலை 9 முதல்18 , ஜுலை 23 முதல்30 , ஓகஸ்ட் 3 முதல் 15 வரையான காலப்பகுதிகளில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே இலங்கையின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா,பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள மக்கள் தற்போதே செறிவான பருவ மழையை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவர்களுக்கு எதிர்காலத்தில் வெள்ள மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்கும். அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மேற்காவுகைச் செயற்பாட்டினால் உருவாகும் மழை தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதேவேளை நாளையதினம்(16) கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இத் தாழமுக்கத்தினால் இலங்கையின் எந்த ஒரு பகுதிக்கும் எத்தகைய பாதிப்பும் கிடையாது. ஆயினும் எதிர்வரும் 23 வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.