வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அரச திணைக்களங்கள் பலரும் நீரில் முழ்கியதுடன் மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்று பிற்பகல் தொடக்கம் கடும் மழை பெய்து வரும் நிலையில் வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களம், தாதியர் கல்லூரி, அரச சுற்றுலா விடுதி, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம் என்பன நீரில் மூழ்கியுள்ளதுடன், காமினி மகா வித்தியாலயம் முன்பாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் வீதி போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியிலும் வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், வவுனியாவின் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் வெள்ள நீரில் முழ்கின.
இதனையடுத்து, வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா பிரதேச செயலாளர், நகர சபை செயலாளர், மாவட்ட அனத்த முகாமைத்துவ பணிப்பாளர், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் வருகை தந்து குறித்த அரச அலுவலங்கள், திணைக்களங்கள் மற்றும் வீதிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் அரச திணைக்களங்களுக்குள் புகுந்த வெள்ள நீர். வவுனியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அரச திணைக்களங்கள் பலரும் நீரில் முழ்கியதுடன் மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இன்று பிற்பகல் தொடக்கம் கடும் மழை பெய்து வரும் நிலையில் வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களம், தாதியர் கல்லூரி, அரச சுற்றுலா விடுதி, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம் என்பன நீரில் மூழ்கியுள்ளதுடன், காமினி மகா வித்தியாலயம் முன்பாக வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் வீதி போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.அத்துடன், வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியிலும் வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், வவுனியாவின் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் வெள்ள நீரில் முழ்கின.இதனையடுத்து, வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், வவுனியா பிரதேச செயலாளர், நகர சபை செயலாளர், மாவட்ட அனத்த முகாமைத்துவ பணிப்பாளர், இராணுவத்தினர் மற்றும் பொலிசார் வருகை தந்து குறித்த அரச அலுவலங்கள், திணைக்களங்கள் மற்றும் வீதிகளில் உள்ள வெள்ள நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.