மாற்றுத்திறனாளிகளை 2025/2026 தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அனுமதிப்பதற்கான நேர்முக பரீட்சை திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இன்று(26) மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்தும் தொழில் செய்வதற்கு ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.சுதாகரன், தொழிற்பயிற்சி நிலையங்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
திருமலையில் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளை இணைப்பதற்கு நேர்முகப் பரீட்சை. மாற்றுத்திறனாளிகளை 2025/2026 தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அனுமதிப்பதற்கான நேர்முக பரீட்சை திருகோணமலை மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில் இன்று(26) மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்தும் தொழில் செய்வதற்கு ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன்போது, மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.சுதாகரன், தொழிற்பயிற்சி நிலையங்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள், சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.