• May 06 2024

பாராளுமன்றத்திலும் உணவு நெருக்கடி...! வட் வரி அதிகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட சிக்கல்...!samugammedia

Sharmi / Jan 13th 2024, 1:38 pm
image

Advertisement

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் உணவு மற்றும் பானங்களுக்கான செலவுகள் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளது.

வட் வரியை 18 சதவீதமாக உயர்த்தியதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால் உணவு விநியோகம் பெரும் சவாலாக மாறியுள்ளது.

பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்களுக்கு அரசாங்கம் பெருமளவு செலவு செய்தாலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து மிகக் குறைந்த பணமே அறவிடப்படுவதாக கூறப்படுகிறது.

இவர்களிடம் இருந்து மாதாந்தம் 1000 ரூபாவே அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு பாராளுமன்றத்தில் உணவுகள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பாராளுமன்றத்திற்கு தேவையான மரக்கறிகளை பெற்றுக்கொள்வதிலும் வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், உணவுக்காக வழங்கப்படும் மரக்கறிகளின் அளவை எதிர்காலத்தில் குறைக்க வேண்டியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாராளுமன்றத்திற்கான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் முறை மாற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்திலும் உணவு நெருக்கடி. வட் வரி அதிகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட சிக்கல்.samugammedia பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் உணவு மற்றும் பானங்களுக்கான செலவுகள் ஏறக்குறைய இரு மடங்காக அதிகரித்துள்ளது.வட் வரியை 18 சதவீதமாக உயர்த்தியதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.இதனால் உணவு விநியோகம் பெரும் சவாலாக மாறியுள்ளது. பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்களுக்கு அரசாங்கம் பெருமளவு செலவு செய்தாலும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களிடமிருந்து மிகக் குறைந்த பணமே அறவிடப்படுவதாக கூறப்படுகிறது.இவர்களிடம் இருந்து மாதாந்தம் 1000 ரூபாவே அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு பாராளுமன்றத்தில் உணவுகள் ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, பாராளுமன்றத்திற்கு தேவையான மரக்கறிகளை பெற்றுக்கொள்வதிலும் வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், உணவுக்காக வழங்கப்படும் மரக்கறிகளின் அளவை எதிர்காலத்தில் குறைக்க வேண்டியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாராளுமன்றத்திற்கான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் முறை மாற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement