வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடாத்திய அமரர் சௌந்தநாயகம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயமும் பெண்கள் பிரிவில் நெளுக்குளம் மகாவித்தியாலமும் வெற்றிவாகை சூடியது.
கடந்த இருதினங்களாக இடம்பெற்றுவந்த சுற்றுப்போட்டியில் இறுதிநாள் நிகழ்வு வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று மாலை இடம்பெற்றிருந்தது.
பரபரப்பான இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயமும்,
பெண்கள் பிரிவில் நெளுக்குளம் மகாவித்தியாலயமும் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது.
வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக் கேடயங்கள் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
சங்கத்தின் இணைப்பாளர் இ.சற்சொரூபன் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் வவுனியா தெற்கு வலய
ஆசிரிய ஆலோசகர் விஸ்னு, யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத் தலைவர் பாபு, அனுசரனையாளர் சார்பில் சௌந்தரநாயகம் பிரதாபன், மற்றும் ரவீந்திரன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் அமலன், சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களான ஜனகரன், ரெஜினோல்ட் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
உதைபந்தாட்டபோட்டி; வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், நெளுக்குளம் மகா வித்தியாலயம் வெற்றிவாகை வவுனியா மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்ட சங்கம் நடாத்திய அமரர் சௌந்தநாயகம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயமும் பெண்கள் பிரிவில் நெளுக்குளம் மகாவித்தியாலமும் வெற்றிவாகை சூடியது.கடந்த இருதினங்களாக இடம்பெற்றுவந்த சுற்றுப்போட்டியில் இறுதிநாள் நிகழ்வு வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று மாலை இடம்பெற்றிருந்தது.பரபரப்பான இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயமும், பெண்கள் பிரிவில் நெளுக்குளம் மகாவித்தியாலயமும் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது.வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக் கேடயங்கள் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.சங்கத்தின் இணைப்பாளர் இ.சற்சொரூபன் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் வவுனியா தெற்கு வலயஆசிரிய ஆலோசகர் விஸ்னு, யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத் தலைவர் பாபு, அனுசரனையாளர் சார்பில் சௌந்தரநாயகம் பிரதாபன், மற்றும் ரவீந்திரன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் அமலன், சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களான ஜனகரன், ரெஜினோல்ட் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.