• Dec 25 2024

கண்டி, கட்டுகஸ்தோட்டை, என்ரூதென்ன முஸ்லிம் வித்தியாலயத்திற்கு : புதிய கட்டிடத் தொகுதி

Tharmini / Dec 22nd 2024, 2:16 pm
image

ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினரான பாரத் அருள்சாமியின் வேண்டுகோளுக்கமைய.

குவைத் அரசின் அல் நஜாத் அமைப்பு மற்றும் அல் நூர் தொண்டு நிறுவனம் என்பவற்றின் நிதி உதவியின் ஊடாக.

 கண்டி கட்டுகஸ்தோட்டை என்ரூதென்ன முஸ்லிம் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக அண்மையில் கையளிக்கப்பட்டது. 

சுமார் பத்து மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டப்பட்ட இப்பாடசாலை கட்டிட தொகுதி  நான்கு வகுப்பறைகளையும் காரியாலயம்  மற்றும் சகல வசதிகளையும் உள்ளடக்கிய கட்டிட தொகுதி ஆகும்.

மூன்று மாடிகளை நிறுவக்கூடிய கட்டிட வடிவமைப்பை கொண்ட கட்டிட தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 பாரத் அருள்சாமியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  குவைத் அரசின்  அல் நஜாத் அமைப்பின் தலைவர் ஷேக் அப்துல்லா அலோபாய்டிலி, அல்லூர் அறக்கட்டளையின் தலைவர் அலியார், பாடசாலை அதிபர்கள்,  கல்வித் திணைக்கள அதிகாரிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.




கண்டி, கட்டுகஸ்தோட்டை, என்ரூதென்ன முஸ்லிம் வித்தியாலயத்திற்கு : புதிய கட்டிடத் தொகுதி ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினரான பாரத் அருள்சாமியின் வேண்டுகோளுக்கமைய.குவைத் அரசின் அல் நஜாத் அமைப்பு மற்றும் அல் நூர் தொண்டு நிறுவனம் என்பவற்றின் நிதி உதவியின் ஊடாக. கண்டி கட்டுகஸ்தோட்டை என்ரூதென்ன முஸ்லிம் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக அண்மையில் கையளிக்கப்பட்டது. சுமார் பத்து மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டின் கீழ் கட்டப்பட்ட இப்பாடசாலை கட்டிட தொகுதி  நான்கு வகுப்பறைகளையும் காரியாலயம்  மற்றும் சகல வசதிகளையும் உள்ளடக்கிய கட்டிட தொகுதி ஆகும். மூன்று மாடிகளை நிறுவக்கூடிய கட்டிட வடிவமைப்பை கொண்ட கட்டிட தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.  பாரத் அருள்சாமியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  குவைத் அரசின்  அல் நஜாத் அமைப்பின் தலைவர் ஷேக் அப்துல்லா அலோபாய்டிலி, அல்லூர் அறக்கட்டளையின் தலைவர் அலியார், பாடசாலை அதிபர்கள்,  கல்வித் திணைக்கள அதிகாரிகள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement