• May 09 2024

இலங்கை எரிபொருள் விற்பனை சந்தையில் நுழையும் வெளிநாட்டு நிறுவனங்கள்! அமைச்சர் அறிவிப்பு samugammedia

Chithra / Mar 27th 2023, 6:28 pm
image

Advertisement

இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.


இதற்கமைய சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் பிஎல்சியுடன் இணைந்து இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.


குறித்த மூன்று நிறுவனங்களுக்கும் இலங்கையில் இயங்குவதற்கான உரிமங்களை வழங்குவதற்கு எரிசக்தி குழு மற்றும் தொடர்புடைய பிற கொள்முதல் குழுக்கள் ஒப்புதல் மற்றும் பரிந்துரையை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


இலங்கை எரிபொருள் விற்பனை சந்தையில் நுழையும் வெளிநாட்டு நிறுவனங்கள் அமைச்சர் அறிவிப்பு samugammedia இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.இதற்கமைய சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம் மற்றும் அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் பிஎல்சியுடன் இணைந்து இலங்கையில் எரிபொருள் விற்பனை சந்தையில் நுழைவதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.குறித்த மூன்று நிறுவனங்களுக்கும் இலங்கையில் இயங்குவதற்கான உரிமங்களை வழங்குவதற்கு எரிசக்தி குழு மற்றும் தொடர்புடைய பிற கொள்முதல் குழுக்கள் ஒப்புதல் மற்றும் பரிந்துரையை வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement