• Jan 11 2025

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு: தலைமறைவான மனுஷவின் சகாக்கள்! பலரிடம் விசாரணை

Chithra / Dec 29th 2024, 7:44 am
image

 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வளாகம் மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் அமைச்சுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தரை தளம் ஆகியவற்றை பயன்படுத்தி மனித கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின்  சகோதரர் திசர ஹிரோஷன நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இதனை மேற்கோள் காட்டியே குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மனுஷ நாணயக்காரவுக்கு நெருங்கிய மேலும் சில தரப்பிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மனுஷ நாணயக்காரவின் இணைப்புச் செயலாளராக இருந்த பாக்ய காரியவசம் என்ற நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்,  இஸ்ரேல் தொழில் மற்றும் தென்கொரிய வேலைகளை பெற்று தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் சம்பாதித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட நபர் மற்றும் பலர் தற்போது காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருந்த தேசப்பிரிய லியனகே என்பவரும் இந்த மனித கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு: தலைமறைவான மனுஷவின் சகாக்கள் பலரிடம் விசாரணை  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வளாகம் மற்றும் நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் அமைச்சுக்கு சொந்தமான கட்டிடம் மற்றும் தரை தளம் ஆகியவற்றை பயன்படுத்தி மனித கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.வெளிநாட்டு வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின்  சகோதரர் திசர ஹிரோஷன நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இதனை மேற்கோள் காட்டியே குறித்த செய்தி வெளியாகியுள்ளது.இந்நிலையில், மனுஷ நாணயக்காரவுக்கு நெருங்கிய மேலும் சில தரப்பிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்படி மனுஷ நாணயக்காரவின் இணைப்புச் செயலாளராக இருந்த பாக்ய காரியவசம் என்ற நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர்,  இஸ்ரேல் தொழில் மற்றும் தென்கொரிய வேலைகளை பெற்று தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் சம்பாதித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும், கடத்தலில் ஈடுபட்ட நபர் மற்றும் பலர் தற்போது காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளராக இருந்த தேசப்பிரிய லியனகே என்பவரும் இந்த மனித கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement