• Apr 26 2024

கனடாவின் முக்கிய பகுதியில் காட்டுத்தீ..!ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்..!samugammedia

Sharmi / Jun 10th 2023, 12:31 pm
image

Advertisement

கனடா பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் வடகிழக்கு பகுதியை காட்டுத் தீ மொத்தமாக விழுங்கி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து காட்டுத்தீ சூழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் டம்ளர் ரிட்ஜ் பகுதி முழுவதும் தீ வியாபிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை அங்கிருந்த குடியிருப்புவாசிகள் அவ்விடத்தை விட்டு  வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை 2,400 குடியிருப்பாளர்கள் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வியாழன் மாலை 9,600 ஹெக்டேரில் வியாபித்திருந்த தீ,வெள்ளிக்கிழமை பிற்பகலில் 23,000 ஹெக்டேராக  அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டம்ளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் சுமார் 150 பேர் தங்கள் குடியிருப்பில் தங்க முடிவு செய்துள்ளதாகவும், அதில் சிலர் தீயணைப்பு வீரர்களுடன் களமிறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கனடாவின் முக்கிய பகுதியில் காட்டுத்தீ.ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்.samugammedia கனடா பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் வடகிழக்கு பகுதியை காட்டுத் தீ மொத்தமாக விழுங்கி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்ளர் ரிட்ஜ் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து காட்டுத்தீ சூழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் டம்ளர் ரிட்ஜ் பகுதி முழுவதும் தீ வியாபிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை அங்கிருந்த குடியிருப்புவாசிகள் அவ்விடத்தை விட்டு  வெளியேறத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இதுவரை 2,400 குடியிருப்பாளர்கள் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.கடந்த வியாழன் மாலை 9,600 ஹெக்டேரில் வியாபித்திருந்த தீ,வெள்ளிக்கிழமை பிற்பகலில் 23,000 ஹெக்டேராக  அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் டம்ளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் சுமார் 150 பேர் தங்கள் குடியிருப்பில் தங்க முடிவு செய்துள்ளதாகவும், அதில் சிலர் தீயணைப்பு வீரர்களுடன் களமிறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement