• May 05 2024

குறைந்த வருமானம் பெறுகின்ற 39,497 குடும்பங்களுக்கு 10கிலோ அரிசி விநியோகம்..!!

Tamil nila / Apr 25th 2024, 7:24 pm
image

Advertisement

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு 10கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 39,497 குடும்பங்களுகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்காக அரிசிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி விநியோகிக்கும் இந்தத் திட்டம் நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்களில் உள்ள 2,511,840 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் இடம்பெறுவதுடன் இதற்காக அரசாங்கம் 4,676,474,300 ரூபாவை செலவிட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ அரிசி விகிதம் இரண்டு (02) மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






குறைந்த வருமானம் பெறுகின்ற 39,497 குடும்பங்களுக்கு 10கிலோ அரிசி விநியோகம். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு 10கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 39,497 குடும்பங்களுகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்காக அரிசிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி விநியோகிக்கும் இந்தத் திட்டம் நாடளாவிய ரீதியில் 18 மாவட்டங்களில் உள்ள 2,511,840 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் இடம்பெறுவதுடன் இதற்காக அரசாங்கம் 4,676,474,300 ரூபாவை செலவிட்டுள்ளது.ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 10 கிலோ அரிசி விகிதம் இரண்டு (02) மாத காலத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement