• Nov 23 2024

ஹிந்துவாக மாறிய பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான்! புதுப் பெயர் என்ன தெரியுமா?

Aathira / May 5th 2024, 10:52 am
image

2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் ஜிப்ரான்.

தனது முதல் படத்தையே சிறப்பாக இசையமைத்த ஜிப்ரானுக்கு  ஏராளமான விருதுகள் கிடைத்தது. அதை தொடர்ந்து திருமணம் என்னும் நிக்காஹ், குட்டி புலி, அமரகாவியம், பாபநாசம், அறம், தீரன், உத்தமவில்லன், அதிகாரம் ஒன்று, துணிவு, ராட்சசன், வத்திக்குச்சி என 50ம்  மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அத்துடன் அண்மையில் ரிலீசான குரங்கு பெடல்  படத்திற்கும் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் வெளியிட்ட இந்த படம் ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், தான் இஸ்லாம் மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டதாக அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய ஜிப்ரான், தனது பெயரையும் மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், இஸ்லாம் மதத்தை பாலோ  பண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் கடைசி மூன்று நான்கு வருடங்களாக மறுபடியும் இந்துவாக மாறிவிட்டேன். சட்டபூர்வமாக எல்லா மாற்றங்களும் செய்துவிட்டேன். படங்களில் கூட ஜிப்ரான் என்கிற பெயரை மட்டும் பயன்படுத்தி வந்த நான், குரங்கு பெடல்  பபடத்தில் ஜிப்ரான் வைபோதா என புது பெயரை போட்டு உள்ளேன்.

எனது அப்பாவின் பெயர் கணேஷ் பாலாஜி வைபோதா. வைபோதா என்றால் விழித்தெழுதல் என பொருள். வாகை சூடவா படம் நான் பிடிச்சு பண்ண படம். அந்த ஒரு உணர்வோடு குரங்கு பெடல் படத்துக்கும் இசையமைத்தேன். அந்தப் படத்தில் என்னுடைய புது பெயரை பயன்படுத்த முடிவு செய்தன்.  இனி நான் பணியாற்றும் படங்களிலும் ஜிப்ரான் வைபோகா என்று பயன்படுத்த உள்ளேன் என்றார்.https://samugammedia.com/category/australia

ஹிந்துவாக மாறிய பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் புதுப் பெயர் என்ன தெரியுமா 2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் ஜிப்ரான்.தனது முதல் படத்தையே சிறப்பாக இசையமைத்த ஜிப்ரானுக்கு  ஏராளமான விருதுகள் கிடைத்தது. அதை தொடர்ந்து திருமணம் என்னும் நிக்காஹ், குட்டி புலி, அமரகாவியம், பாபநாசம், அறம், தீரன், உத்தமவில்லன், அதிகாரம் ஒன்று, துணிவு, ராட்சசன், வத்திக்குச்சி என 50ம்  மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அத்துடன் அண்மையில் ரிலீசான குரங்கு பெடல்  படத்திற்கும் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் வெளியிட்ட இந்த படம் ரசிகர் மத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.இந்த நிலையில், தான் இஸ்லாம் மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டதாக அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய ஜிப்ரான், தனது பெயரையும் மாற்றிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.அதன்படி அவர் கூறுகையில், இஸ்லாம் மதத்தை பாலோ  பண்ணிக்கொண்டு இருந்தேன். ஆனால் கடைசி மூன்று நான்கு வருடங்களாக மறுபடியும் இந்துவாக மாறிவிட்டேன். சட்டபூர்வமாக எல்லா மாற்றங்களும் செய்துவிட்டேன். படங்களில் கூட ஜிப்ரான் என்கிற பெயரை மட்டும் பயன்படுத்தி வந்த நான், குரங்கு பெடல்  பபடத்தில் ஜிப்ரான் வைபோதா என புது பெயரை போட்டு உள்ளேன்.எனது அப்பாவின் பெயர் கணேஷ் பாலாஜி வைபோதா. வைபோதா என்றால் விழித்தெழுதல் என பொருள். வாகை சூடவா படம் நான் பிடிச்சு பண்ண படம். அந்த ஒரு உணர்வோடு குரங்கு பெடல் படத்துக்கும் இசையமைத்தேன். அந்தப் படத்தில் என்னுடைய புது பெயரை பயன்படுத்த முடிவு செய்தன்.  இனி நான் பணியாற்றும் படங்களிலும் ஜிப்ரான் வைபோகா என்று பயன்படுத்த உள்ளேன் என்றார்.https://samugammedia.com/category/australia

Advertisement

Advertisement

Advertisement