• May 06 2024

கெகிராவையில் இடம்பெற்ற கிளிமூக்கு சேவல் கண்காட்சி...!

Sharmi / Apr 24th 2024, 11:25 am
image

Advertisement

Srilanka parrot beak association இலங்கை வரலாற்றில் இரண்டாவது தடவையாக நடத்திய மாபெரும் கிளிமூக்கு சேவல்களின் கண்காட்சி கடந்த சனிக்கிழமை (20)  கெகிராவையில் நடைபெற்றது . 

மேற்படி கண்காட்சியில் நாடு பூராகவும் இருந்து சுமார் 50 இற்கும் மேற்பட்ட கிளிமூக்கு சேவல்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றிருந்தன.

இதன்போது, கிளி மூக்கு விசிறிவால் கோழி வளர்ப்பாளர்களுடன் பறவை ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்த இக்கண்காட்சியில் பங்கேற்ற சேவல்களுக்கு நினைவுச் சின்னங்களுடன், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பன. 

ஆரம்பத்தில் இந்தியாவில் மட்டுமே வளர்க்கப்பட்டு வந்துள்ள இச் சேவல் இனம் இன்றளவில் இலங்கையில் நூற்றுக்கணக்கான வளர்ப்பார்களால் ஆர்வத்துடன் இதனை வளர்த்து வருகின்றனர்.

கண்ணைக் கவரும் அழகிய நிறத்துடனும் தோற்றத்துடனும் காட்சியளிக்கும் இச்சேவல் வளர்ப்பானது சிறந்த பொழுதுபோக்காக ஒருபுறம் இருக்க பொருளாதார ஈட்டு வழிமுறையாகவும் இருக்கிறது. 

இச்சேவல்கள் இலங்கையில் இருந்து பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


கெகிராவையில் இடம்பெற்ற கிளிமூக்கு சேவல் கண்காட்சி. Srilanka parrot beak association இலங்கை வரலாற்றில் இரண்டாவது தடவையாக நடத்திய மாபெரும் கிளிமூக்கு சேவல்களின் கண்காட்சி கடந்த சனிக்கிழமை (20)  கெகிராவையில் நடைபெற்றது . மேற்படி கண்காட்சியில் நாடு பூராகவும் இருந்து சுமார் 50 இற்கும் மேற்பட்ட கிளிமூக்கு சேவல்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றிருந்தன.இதன்போது, கிளி மூக்கு விசிறிவால் கோழி வளர்ப்பாளர்களுடன் பறவை ஆர்வலர்களும் கலந்து சிறப்பித்த இக்கண்காட்சியில் பங்கேற்ற சேவல்களுக்கு நினைவுச் சின்னங்களுடன், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பன. ஆரம்பத்தில் இந்தியாவில் மட்டுமே வளர்க்கப்பட்டு வந்துள்ள இச் சேவல் இனம் இன்றளவில் இலங்கையில் நூற்றுக்கணக்கான வளர்ப்பார்களால் ஆர்வத்துடன் இதனை வளர்த்து வருகின்றனர்.கண்ணைக் கவரும் அழகிய நிறத்துடனும் தோற்றத்துடனும் காட்சியளிக்கும் இச்சேவல் வளர்ப்பானது சிறந்த பொழுதுபோக்காக ஒருபுறம் இருக்க பொருளாதார ஈட்டு வழிமுறையாகவும் இருக்கிறது. இச்சேவல்கள் இலங்கையில் இருந்து பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement