• May 06 2024

திருமலை தோப்பூரில் சீறிப்பாய்ந்த காளைகள்...! களைகட்டிய விளையாட்டு நிகழ்வுகள்...!

Sharmi / Apr 24th 2024, 1:30 pm
image

Advertisement

திருகோணமலை தோப்பூர் -பட்டியடி திறந்தவெளி மைதானத்தில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நேற்றையதினம் (23) மாலை இடம்பெற்றது.

தோப்பூர் பாரம்பரிய விளையாட்டுக்குழு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது தோப்பூரின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளான மாட்டு வண்டில் சவாரிப் போட்டி, படகோட்டப் போட்டி உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

நிகழ்வின் போது சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இந்நிகழ்வில் அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் ,திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரான ஏ.எல்.எம்.அதாவுல்லா,மாவட்ட செயலாளர் ,பொலிஸ் உயரதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,அரச உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திருமலை தோப்பூரில் சீறிப்பாய்ந்த காளைகள். களைகட்டிய விளையாட்டு நிகழ்வுகள். திருகோணமலை தோப்பூர் -பட்டியடி திறந்தவெளி மைதானத்தில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நேற்றையதினம் (23) மாலை இடம்பெற்றது.தோப்பூர் பாரம்பரிய விளையாட்டுக்குழு இதனை ஏற்பாடு செய்திருந்தது.இதன்போது தோப்பூரின் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளான மாட்டு வண்டில் சவாரிப் போட்டி, படகோட்டப் போட்டி உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.நிகழ்வின் போது சமாதானப் புறாக்கள் பறக்க விடப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.இந்நிகழ்வில் அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் ,திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரான ஏ.எல்.எம்.அதாவுல்லா,மாவட்ட செயலாளர் ,பொலிஸ் உயரதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள்,அரச உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement