முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலியைச் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை (02) நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றுள்ளது.
ஒரு வார கால விஜயத்தை மேற்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் இந்தியா சென்ற ரணில் விக்கிரமசிங்க, அங்கிருந்து நேபாளத்திற்கு சென்று அந்நாட்டுப் பிரதமரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இரு தெற்காசிய நாடுகளின் பரஸ்பர நலன்களின் பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடல் மையமாக இருந்தது.
நேபாளி காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினரான தொழிலதிபர் பினோத் சவுத்ரியும் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாள பிரதமரை சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலியைச் சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு இன்று வியாழக்கிழமை (02) நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றுள்ளது.ஒரு வார கால விஜயத்தை மேற்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் இந்தியா சென்ற ரணில் விக்கிரமசிங்க, அங்கிருந்து நேபாளத்திற்கு சென்று அந்நாட்டுப் பிரதமரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் இரு தெற்காசிய நாடுகளின் பரஸ்பர நலன்களின் பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடல் மையமாக இருந்தது.நேபாளி காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினரான தொழிலதிபர் பினோத் சவுத்ரியும் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.