• May 12 2025

600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது

Chithra / May 11th 2025, 12:53 pm
image

 

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் எமிரெட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாயிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.

அண்மையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான சிகரெட் தொகை இதுவாகும் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, பம்பலப்பிட்டிய மற்றும் கொஸ்வத்த பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நால்வரும் விமான நிலையத்தை விட்டு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வெளியேற முயன்றதைத் தொடர்ந்து அவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது அவர்களின் 20 பைகளில் இருந்த சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது  சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேகநபர்கள் எமிரெட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாயிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.அண்மையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான சிகரெட் தொகை இதுவாகும் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த சந்தேகநபர்கள் கொழும்பு வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, பம்பலப்பிட்டிய மற்றும் கொஸ்வத்த பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேகநபர்கள் நால்வரும் விமான நிலையத்தை விட்டு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வெளியேற முயன்றதைத் தொடர்ந்து அவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது அவர்களின் 20 பைகளில் இருந்த சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement