• Nov 24 2024

ஹட்டனில் பணப்பைகள் மற்றும் தங்க நகைகளை திருடிய நான்கு யுவதிகள் கைது

Tharmini / Oct 30th 2024, 1:21 pm
image

நாளை (31) தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஹட்டனுக்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள்,

நுகர்வோர்களிடம் இருந்து பணப்பைகள் மற்றும் தங்க நகைகளை திருடிய நான்கு யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகருக்கு வரும் வாடிக்கையாளர்களின் பணப்பைகள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றின் நான்கு யுவதிகள் நேற்று (29) பிற்பகல் ஹட்டன் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகருக்கு அதிகளவான வாடிக்கையாளர்கள் வருகை தந்திருந்த நிலையில், சில வாடிக்கையாளர்களின் பணப்பைகள் மற்றும் தங்க ஆபரணங்கள் காணாமல் போனதாக ஹட்டன் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஹட்டன் நகருக்கு வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன், அதன் ஊடாக சிவில் உடையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்ட போது சந்தேகத்தின் பேரில் வாடிக்கையாளரின் கழுத்தில் நகையை உடைக்க முற்பட்ட பெண்ணை கைதுசெய்துள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

நான்கு யுவதிகளையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது சந்தேகநபர்கள் வசம் இரண்டு இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய் பணமும் சில தங்க ஆபரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21-26 வயதுடையவர்கள்.


ஹட்டனில் பணப்பைகள் மற்றும் தங்க நகைகளை திருடிய நான்கு யுவதிகள் கைது நாளை (31) தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஹட்டனுக்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள், நுகர்வோர்களிடம் இருந்து பணப்பைகள் மற்றும் தங்க நகைகளை திருடிய நான்கு யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகருக்கு வரும் வாடிக்கையாளர்களின் பணப்பைகள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றின் நான்கு யுவதிகள் நேற்று (29) பிற்பகல் ஹட்டன் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகருக்கு அதிகளவான வாடிக்கையாளர்கள் வருகை தந்திருந்த நிலையில், சில வாடிக்கையாளர்களின் பணப்பைகள் மற்றும் தங்க ஆபரணங்கள் காணாமல் போனதாக ஹட்டன் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஹட்டன் நகருக்கு வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன், அதன் ஊடாக சிவில் உடையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்ட போது சந்தேகத்தின் பேரில் வாடிக்கையாளரின் கழுத்தில் நகையை உடைக்க முற்பட்ட பெண்ணை கைதுசெய்துள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.நான்கு யுவதிகளையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது சந்தேகநபர்கள் வசம் இரண்டு இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய் பணமும் சில தங்க ஆபரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21-26 வயதுடையவர்கள்.

Advertisement

Advertisement

Advertisement