• May 20 2024

மடிகணினியால் நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட தீவிபத்து: நால்வர் காயம்!

Tamil nila / Feb 8th 2023, 8:37 pm
image

Advertisement

அமெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணியின் மடிக்கணினியால் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


செவ்வாயன்று(07) அமெரிக்காவில் நெவார்க் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் கேபினில் லேப்டாப் திடீரென தீப்பிடித்தது.


நடுவானில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 4 விமானப் பணிப்பெண்கள் காயமடைந்தனர். இதனால், விமானம் மீண்டும் சான் டியாகோ விமான நிலையத்திற்கு திரும்ப வேண்டியிருந்தது.புறப்பட்ட சிறிது நேரத்தில், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 2664-ல் பயணித்த பயணி ஒருவரின் மடிக்கணினியில் தீ விபத்து ஏற்பட்டது.


விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மடிக்கணினியிலிருந்து பரவிய தீயை அணைக்க முயன்ற 4 விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர். விமானம் சான் டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியதும், விமானப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


மடிக்கணினி பேட்டரியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது என்று ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தை விரிவாக விசாரித்துவருவதாகவும் கூறியுள்ளது.

மடிகணினியால் நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட தீவிபத்து: நால்வர் காயம் அமெரிக்காவில் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பயணியின் மடிக்கணினியால் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.செவ்வாயன்று(07) அமெரிக்காவில் நெவார்க் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் கேபினில் லேப்டாப் திடீரென தீப்பிடித்தது.நடுவானில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 4 விமானப் பணிப்பெண்கள் காயமடைந்தனர். இதனால், விமானம் மீண்டும் சான் டியாகோ விமான நிலையத்திற்கு திரும்ப வேண்டியிருந்தது.புறப்பட்ட சிறிது நேரத்தில், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் 2664-ல் பயணித்த பயணி ஒருவரின் மடிக்கணினியில் தீ விபத்து ஏற்பட்டது.விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மடிக்கணினியிலிருந்து பரவிய தீயை அணைக்க முயன்ற 4 விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர். விமானம் சான் டியாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியதும், விமானப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.மடிக்கணினி பேட்டரியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது என்று ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) தெரிவித்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தை விரிவாக விசாரித்துவருவதாகவும் கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement