• May 17 2024

ஓடும் பேருந்தில் 20 பவுண் நகை திருட்டு- இரு பெண்கள் உட்பட நால்வர் கைது! samugammedia

Tamil nila / Sep 26th 2023, 6:21 pm
image

Advertisement

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். 

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் முருங்கன் பகுதியில் இருந்து ஆசிரியரான பெண் ஒருவரும் பயணித்துள்ளார். 

குறித்த பேருந்து வவுனியா, மாவட்ட செயலகம் முன்பாக பயணித்த போது குறித்த பெண் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். இதன் போது குறித்த பெண்ணின் கைப்பை திறக்கப்பட்டு அதற்குள் இருந்த அவரது சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் காணாமல் போனமையை அவதானித்துள்ளார். உடனடியாக பேருந்தை நிறுத்தி பேருந்தில் தேடிய போதும் நகை கிடைக்கவில்லை. 

இதனையடுத்து வவுனியா பொலிஸில் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த புத்தளம், 4ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களும் ஆக 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்டதாக கூறப்பட்ட 20 பவுண் நகை, முச்சக்கர வண்டி மற்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் கைப்பற்ப்பட்டுள்ளது.  

மேலதிக விசாரணையின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்

ஓடும் பேருந்தில் 20 பவுண் நகை திருட்டு- இரு பெண்கள் உட்பட நால்வர் கைது samugammedia மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகைகளை திருடியதாக இரு பெண்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் முருங்கன் பகுதியில் இருந்து ஆசிரியரான பெண் ஒருவரும் பயணித்துள்ளார். குறித்த பேருந்து வவுனியா, மாவட்ட செயலகம் முன்பாக பயணித்த போது குறித்த பெண் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளார். இதன் போது குறித்த பெண்ணின் கைப்பை திறக்கப்பட்டு அதற்குள் இருந்த அவரது சங்கிலி, மோதிரம் உட்பட 20 பவுண் நகைகள் காணாமல் போனமையை அவதானித்துள்ளார். உடனடியாக பேருந்தை நிறுத்தி பேருந்தில் தேடிய போதும் நகை கிடைக்கவில்லை. இதனையடுத்து வவுனியா பொலிஸில் குறித்த ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சம்பவம் தொடர்பில் மகாறம்பைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த புத்தளம், 4ம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த இரு பெண்களும், இரு ஆண்களும் ஆக 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்டதாக கூறப்பட்ட 20 பவுண் நகை, முச்சக்கர வண்டி மற்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் பொலிசாரால் கைப்பற்ப்பட்டுள்ளது.  மேலதிக விசாரணையின் பின் குறித்த நான்கு பேரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்

Advertisement

Advertisement

Advertisement