• Oct 18 2024

பிரான்ஸ் – நியூ கலிடோனியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு..!!

Tamil nila / May 14th 2024, 8:56 pm
image

Advertisement

பிரெஞ்சு பசிபிக் பிராந்தியமான நியூ கலிடோனியாவில் 02 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக சுதந்திரம் தேடும் பழங்குடியின மக்களுக்கும் பிரான்ஸின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் காலனித்துவவாதிகளின் சந்ததியினருக்கும் இடையில் வெடித்த வன்முறைகளின் விளைவாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நியூ கலிடோனியாவில் வாக்களிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சீர்திருத்தங்கள் குறித்து பிரெஞ்சு சட்டமியற்றுபவர்கள் விவாதித்ததால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இது தற்போது வன்முறையாக உருபெற்றுள்ளது.

வன்முறையின் போது  82 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 54 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மக்கள் குழுவாக கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளதுடன், விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள், 1998 முதல் புதுப்பிக்கப்படாத வாக்காளர் பட்டியலை விரிவாக்குவது நியூ கலிடோனியாவில் உள்ள பிரான்ஸ் சார்பு அரசியல்வாதிகளுக்கு பயனளிக்கும் என்றும், ஒரு காலத்தில் கடுமையான பிரிவினைக் கொள்கைகள் மற்றும் பரவலான பாகுபாடுகளால் பாதிக்கப்பட்ட பழங்குடி கனக் மக்களை மேலும் ஓரங்கட்டுவதாகவும் கூறுகிறார்கள்.

பிரான்ஸ் – நியூ கலிடோனியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு. பிரெஞ்சு பசிபிக் பிராந்தியமான நியூ கலிடோனியாவில் 02 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பல தசாப்தங்களாக சுதந்திரம் தேடும் பழங்குடியின மக்களுக்கும் பிரான்ஸின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் காலனித்துவவாதிகளின் சந்ததியினருக்கும் இடையில் வெடித்த வன்முறைகளின் விளைவாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நியூ கலிடோனியாவில் வாக்களிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சீர்திருத்தங்கள் குறித்து பிரெஞ்சு சட்டமியற்றுபவர்கள் விவாதித்ததால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இது தற்போது வன்முறையாக உருபெற்றுள்ளது.வன்முறையின் போது  82 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 54 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மக்கள் குழுவாக கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளதுடன், விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.சீர்திருத்தங்களை எதிர்ப்பவர்கள், 1998 முதல் புதுப்பிக்கப்படாத வாக்காளர் பட்டியலை விரிவாக்குவது நியூ கலிடோனியாவில் உள்ள பிரான்ஸ் சார்பு அரசியல்வாதிகளுக்கு பயனளிக்கும் என்றும், ஒரு காலத்தில் கடுமையான பிரிவினைக் கொள்கைகள் மற்றும் பரவலான பாகுபாடுகளால் பாதிக்கப்பட்ட பழங்குடி கனக் மக்களை மேலும் ஓரங்கட்டுவதாகவும் கூறுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement