• May 21 2024

முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் விநியோகம்! samugammedia

Chithra / Oct 17th 2023, 12:25 pm
image

Advertisement


முல்லைத்தீவில் சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (17.10.2023) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு - நகர்பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளர் சரத் சந்திரநாயக்க, நீரியல்வள உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட சம்மேள தலைவர் வி.அருள்நாதன், கடற்தொழில் அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் பத்மன் எனப் பலரும் கலந்து கொண்டு கடற்றொழிலாளர்களுக்கான மண்ணெண்ணையை வழங்கி வைத்திருந்தனர்.

கடற்றொழிலாளர்களுக்கு முதல்கட்டமாக 75 லீற்றர் வீதம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் கட்டமாக 78  லீற்றர் என்ற அடிப்படையில் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


முல்லைத்தீவில் கடற்றொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் விநியோகம் samugammedia முல்லைத்தீவில் சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக மண்ணெண்ணை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வு இன்று (17.10.2023) செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு - நகர்பகுதியில்  இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளர் சரத் சந்திரநாயக்க, நீரியல்வள உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்ட சம்மேள தலைவர் வி.அருள்நாதன், கடற்தொழில் அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் பத்மன் எனப் பலரும் கலந்து கொண்டு கடற்றொழிலாளர்களுக்கான மண்ணெண்ணையை வழங்கி வைத்திருந்தனர்.கடற்றொழிலாளர்களுக்கு முதல்கட்டமாக 75 லீற்றர் வீதம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாம் கட்டமாக 78  லீற்றர் என்ற அடிப்படையில் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement