• Jun 17 2024

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சடலமாக மீட்பு.!

Tamil nila / May 26th 2024, 7:06 pm
image

Advertisement

இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இராஜகிரிய பகுதியிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

தனது 53வது வயதில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் சடலமாக மீட்பு. இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக இராஜகிரிய பகுதியிலுள்ள அவரது உத்தியோகப்பூர்வ வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.தனது 53வது வயதில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் உயிரிழந்துள்ளார்.திடீர் சுகயீனம் காரணமாக இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement