• Jun 17 2024

LPL இருபதுக்கு 20 தொடரின் விளம்பரத் தூதரானார் மைக்கல் கிளார்க்...!

Anaath / May 26th 2024, 7:33 pm
image

Advertisement

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம்  ஜூலை 21ஆம் திகதி வரை 2024 ஆம் ஆண்டிற்கான  LPL லீக் இருபதுக்கு 20 தொடர் ஆரம்பமாகவுள்ளது. 

இதில் விளம்பரத் தூதராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார் 

இந்தத் தொடரானது கொழும்பு, தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த தொடருக்கான விளம்பரத் தூதராக மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்  2024 ஆம் ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இளம் வீரர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளதுடன் இந்த ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் தொடர் சிறப்பான தொடராக அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

LPL இருபதுக்கு 20 தொடரின் விளம்பரத் தூதரானார் மைக்கல் கிளார்க். எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி தொடக்கம்  ஜூலை 21ஆம் திகதி வரை 2024 ஆம் ஆண்டிற்கான  LPL லீக் இருபதுக்கு 20 தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதில் விளம்பரத் தூதராக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டுள்ளார் இந்தத் தொடரானது கொழும்பு, தம்புள்ளை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை குறித்த தொடருக்கான விளம்பரத் தூதராக மைக்கல் கிளார்க் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்  2024 ஆம் ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இளம் வீரர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளதுடன் இந்த ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் தொடர் சிறப்பான தொடராக அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement