• Nov 22 2024

வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு..!

Tamil nila / May 26th 2024, 7:33 pm
image

வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு மகஜர் ஒன்றினை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக இன்று மாலை  கையளித்தனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தந்த நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக வருகை தந்த வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்து தமது பிரச்சனை தொடர்பில் கருத்து தெரிவிக்க முயற்சித்தனர்.

பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களால் முன்பள்ளி ஆசிரியர்களை உள்ளே சென்று ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து குறித்த ஆசிரியர்கள் தமது மகஜரை கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக ஜனாதிக்கு கையளித்தனர்.

இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள்,

வவுனியா வடக்கு பகுதியில் முன்பள்ளி ஆசிரியர்களாக நாம் நீண்டகாலம் பணியாற்றுகின்றோம். எமக்கான உதவிக் கொடுப்பனவான 6 ஆயிரம் ரூபாய் எனட்பது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் போதாது. மாத சம்பளம் 60 ஆயிரத்திற்கு மேல் பெறுபவர்களே தமது குடும்பத்தை கொண்டு நடத்த முடியாது கஸ்ரப்படுகின்றனர். ஆனால் நாம் 6000 ரூபாய் சம்பளத்துடன் எப்படி வாழ முடியும். 

எமக்கான சம்பளங்கள் அதிகரிக்கப்படுவதுடன், ஏனைய அரச சேவை போல் முன்பள்ளி ஆசிரியர்களையும் நிரந்தமாக அரசாங்க சேவைக்குள் உள்வாங்க வேண்டும். முன்பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. அவை மேம்படுத்தப்பட வேண்டும். 

முன்பள்ளிகளையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து அரச கட்டமைப்புக்களாக அவை மாற்றப்பட்டு அபிவிருத்தி செய்ய வேண்டும். இவ்வாறான பல விடயங்களை உள்ளடக்கி மகஜர் ஒன்றினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கையளிக்க வந்திருந்தோம். 

அனுமதி கிடைக்கவில்லை. இராஜாங்க அமைச்சர் ஊடாக கொடுத்துள்ளோம். ஜனாதிபதி இதனை கவனத்தில் எடுத்து நல்லதொரு முடிவை தருவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அந்த முடிவுக்காக நாம் காத்திருக்கின்றோம் எனத் தெரிவித்தனர். 



வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு. வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு மகஜர் ஒன்றினை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக இன்று மாலை  கையளித்தனர்.வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தந்த நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக வருகை தந்த வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் ஜனாதிபதியை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்து தமது பிரச்சனை தொடர்பில் கருத்து தெரிவிக்க முயற்சித்தனர்.பாதுகாப்பு கடமையில் இருந்த உத்தியோகத்தர்களால் முன்பள்ளி ஆசிரியர்களை உள்ளே சென்று ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து குறித்த ஆசிரியர்கள் தமது மகஜரை கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஊடாக ஜனாதிக்கு கையளித்தனர்.இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வவுனியா வடக்கு முன்பள்ளி ஆசிரியர்கள்,வவுனியா வடக்கு பகுதியில் முன்பள்ளி ஆசிரியர்களாக நாம் நீண்டகாலம் பணியாற்றுகின்றோம். எமக்கான உதவிக் கொடுப்பனவான 6 ஆயிரம் ரூபாய் எனட்பது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் போதாது. மாத சம்பளம் 60 ஆயிரத்திற்கு மேல் பெறுபவர்களே தமது குடும்பத்தை கொண்டு நடத்த முடியாது கஸ்ரப்படுகின்றனர். ஆனால் நாம் 6000 ரூபாய் சம்பளத்துடன் எப்படி வாழ முடியும். எமக்கான சம்பளங்கள் அதிகரிக்கப்படுவதுடன், ஏனைய அரச சேவை போல் முன்பள்ளி ஆசிரியர்களையும் நிரந்தமாக அரசாங்க சேவைக்குள் உள்வாங்க வேண்டும். முன்பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. அவை மேம்படுத்தப்பட வேண்டும். முன்பள்ளிகளையும் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து அரச கட்டமைப்புக்களாக அவை மாற்றப்பட்டு அபிவிருத்தி செய்ய வேண்டும். இவ்வாறான பல விடயங்களை உள்ளடக்கி மகஜர் ஒன்றினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கையளிக்க வந்திருந்தோம். அனுமதி கிடைக்கவில்லை. இராஜாங்க அமைச்சர் ஊடாக கொடுத்துள்ளோம். ஜனாதிபதி இதனை கவனத்தில் எடுத்து நல்லதொரு முடிவை தருவார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அந்த முடிவுக்காக நாம் காத்திருக்கின்றோம் எனத் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement