• Apr 08 2025

புத்தாண்டு காலத்தில் நியாயமான விலையில் Frozen Fish பொதிகள்!

Chithra / Apr 7th 2025, 11:50 am
image


தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் புதிய மீன்களை நியாயமான விலையில் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 300 மற்றும் 400 கிராம் Frozen Fish பொதிகள் நியாயமான விலையில் விநியோகிக்கப்படவுள்ளன.

தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய மீன் தட்டுப்பாட்டை குறைப்பதற்கும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.ஏ.கே.மார்க் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்டமாக இந்த திட்டமானது, தெரிவு செய்யப்பட்ட 21 சதொச விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு காலத்தில் நியாயமான விலையில் Frozen Fish பொதிகள் தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் புதிய மீன்களை நியாயமான விலையில் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தவுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் 300 மற்றும் 400 கிராம் Frozen Fish பொதிகள் நியாயமான விலையில் விநியோகிக்கப்படவுள்ளன.தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய மீன் தட்டுப்பாட்டை குறைப்பதற்கும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.ஏ.கே.மார்க் தெரிவித்துள்ளார்.ஆரம்பகட்டமாக இந்த திட்டமானது, தெரிவு செய்யப்பட்ட 21 சதொச விற்பனை நிலையங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement