பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை செயல்படுத்துவதற்கான சுற்றறிக்கையை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
"Clean Sri Lanka" திட்டத்திற்கு இணங்க, அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு மேற்படி பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கருத்து வௌியிட்ட அவர்,
"Clean Sri Lanka" திட்டத்திற்காக நாங்கள் கிராமத்தில் குழுவை உருவாக்குகிறோம். அந்த கிராமக் குழுவிற்கான ஒதுக்கப்பட்ட பணிகள் தொடர்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்படும்.
பெரிய பெரிய பிரச்சினைகள் உள்ளன. அவற்றை மதிப்பாய்வு செய்வதற்காகவே நாங்கள் இந்த குழுவை நிறுவுகிறோம்.
கிராம சேவகரும் பிரதேச செயலாளரும் இதனை வழிநடத்துவார்கள்.
அது மட்டுமல்லாமல், பிரதேச செயலகத்தில் போதைப்பொருள் தடுப்புக்குப் பொறுப்பான ஒருவர் கிராமத்தில் இருக்கிறார், அந்த நபரும் இதில் உறுப்பினராக உள்ளார்.
அத்தோடு, மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார். இதற்கான செயற்குழு ஒன்றை நியமிப்போம். கிராமத்தில் அமைதியைப் பேணுவதற்கு நாங்கள் ஒரு தனி குழுவை நியமிப்போம். என்றார்.
பொதுமக்கள் பாதுகாப்புக் குழுவை நியமிக்க நடவடிக்கை - விரைவில் சுற்றறிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை செயல்படுத்துவதற்கான சுற்றறிக்கையை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். "Clean Sri Lanka" திட்டத்திற்கு இணங்க, அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு மேற்படி பொதுமக்கள் பாதுகாப்பு குழுக்கள் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் கருத்து வௌியிட்ட அவர், "Clean Sri Lanka" திட்டத்திற்காக நாங்கள் கிராமத்தில் குழுவை உருவாக்குகிறோம். அந்த கிராமக் குழுவிற்கான ஒதுக்கப்பட்ட பணிகள் தொடர்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்படும். பெரிய பெரிய பிரச்சினைகள் உள்ளன. அவற்றை மதிப்பாய்வு செய்வதற்காகவே நாங்கள் இந்த குழுவை நிறுவுகிறோம். கிராம சேவகரும் பிரதேச செயலாளரும் இதனை வழிநடத்துவார்கள். அது மட்டுமல்லாமல், பிரதேச செயலகத்தில் போதைப்பொருள் தடுப்புக்குப் பொறுப்பான ஒருவர் கிராமத்தில் இருக்கிறார், அந்த நபரும் இதில் உறுப்பினராக உள்ளார். அத்தோடு, மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார். இதற்கான செயற்குழு ஒன்றை நியமிப்போம். கிராமத்தில் அமைதியைப் பேணுவதற்கு நாங்கள் ஒரு தனி குழுவை நியமிப்போம். என்றார்.