எரிபொருள் இறக்குமதியின் போது முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு சென்ற தரகுப்பணம் தற்போதைய அரசாங்கத்துக்கும் செல்கிறது என ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஊடக பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் 120 ரூபாவுக்கு ஒரு லீற்றர் பெற்றோலை விநியோகிப்பதாகவும்,
ஓரிரு மாதங்களுக்கு பின்னர் துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்படும் போது நிர்ணயிக்கப்படும் விலைக்கு அமைவாகவே எரிபொருளின் விலை நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் 24 மணித்தியாலங்களில் எரிபொருள் விலை குறைப்பதாக குறிப்பிட்ட விடயம் மறக்கடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரங்களில் பேசுவதற்கும், அரச நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எரிபொருள் இறக்குமதியின் போது முன்னாள் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு சென்ற தரகுப்பணம் இந்த அரசாங்கத்துக்கும் செல்கிறது.
இந்த அரசாங்கமும் மக்களை சுரண்டிப் பிழைக்கிறது. வாழ்க்கைச் செலவுகளை குறைப்பதாக குறிப்பிட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் தேர்தல் பிரச்சாரமாக மாற்றமடைந்துள்ளது.
பெருந்தோட்ட மக்களை அரசாங்கம் கவனத்திற்கொள்ளவில்லை. மண்ணெண்ணையின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றார்.
எரிபொருள் விலை குறைப்பு நியாயமற்றது; மக்களை சுரண்டி பிழைக்கும் அநுர அரசு சாடும் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் எரிபொருள் இறக்குமதியின் போது முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு சென்ற தரகுப்பணம் தற்போதைய அரசாங்கத்துக்கும் செல்கிறது என ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஊடக பேச்சாளர் ஆனந்த பாலித்த தெரிவித்தார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் 120 ரூபாவுக்கு ஒரு லீற்றர் பெற்றோலை விநியோகிப்பதாகவும், ஓரிரு மாதங்களுக்கு பின்னர் துறைமுகத்துக்கு இறக்குமதி செய்யப்படும் போது நிர்ணயிக்கப்படும் விலைக்கு அமைவாகவே எரிபொருளின் விலை நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் 24 மணித்தியாலங்களில் எரிபொருள் விலை குறைப்பதாக குறிப்பிட்ட விடயம் மறக்கடிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரங்களில் பேசுவதற்கும், அரச நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படும் என்பதை அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும்.எரிபொருள் இறக்குமதியின் போது முன்னாள் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு சென்ற தரகுப்பணம் இந்த அரசாங்கத்துக்கும் செல்கிறது. இந்த அரசாங்கமும் மக்களை சுரண்டிப் பிழைக்கிறது. வாழ்க்கைச் செலவுகளை குறைப்பதாக குறிப்பிட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் தேர்தல் பிரச்சாரமாக மாற்றமடைந்துள்ளது.பெருந்தோட்ட மக்களை அரசாங்கம் கவனத்திற்கொள்ளவில்லை. மண்ணெண்ணையின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. என்றார்.