மீனவர்களுக்காக வீட்டுத் திட்டங்களுடன் கூடிய எரிபொருள் மானியங்களையும் வழங்க வேண்டும் என தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நான் பிரதிநிதித்துவப்படுத்தும் திருகோணமலை மாவட்டமானது 141 கி.மீ நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது. திருகோணமலை மாவட்டம் அமைந்துள்ள கிழக்கு மாகாணம் ஆனது 431 கி.மீ நீளமுள்ள கடற்கரையை கொண்டதாகும்.
கிழக்கில் மீன்பிடித் தொழிலும் அது சார்ந்த பொருளாதாரமும் மிக முதன்மையான ஒன்றாகும். திருகோணமலையில் 23,975 கடற் தொழிலில் ஈடுபடும் குடும்பங்கள் உள்ளன. கிழக்கு மாகணத்தில் 67,355 கடற்தொழிலில் ஈடுபடும் குடும்பங்கள் உள்ளன.
இந்த அரசால் முன்வைக்கப்பட்டுள்ள பாதீட்டில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 6,213 மில்லியன் ரூபா மீண்டெழும் செலவுக்காகவும் 5,227 மில்லியன் ரூபா மூலதன செலவுக்காகவும் மொத்தமாக 11,440 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 428 மில்லியன் ரூபா கூடுதலானது ஆகும். இது வரவேற்கத்தக்க விடயமாகும்.
மீண்டெழும் செலவுக்காக 2024 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 2,580 மில்லியன் ரூபா ஆல் அதிகரிக்கப்பட்டுள்ள பொழுதிலும் மூலதன நிதி ஒதுக்கீடானது இந்த ஆண்டு பாதீட்டில் 2,152 மில்லியன் ரூபா ஆல் குறைக்கப்பட்டுள்ளது.
இது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற விடயம் அல்ல.
இந்த அமைச்சுக்கான மொத்த ஒதுக்கீடு பாதீட்டில் 0.3 % ஆக காணப்படுவது கவலை தரும் விடயமாகும். மேலும் மூலதன ஒதுக்கீடு 0.12 % ஆக காணப்படுவது அதனைவிட கவலை தரும் விடயமாகும். இந்த விடயத்தில் கடற்றொழில் அமைச்சரும் நிதி அமைச்சரும் தமது பார்வையை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
மீன்பிடித் துறை, இன்று எதிர்நோக்கும் பெரும் சிக்கல்களாக முதலாவது இந்திய விசைப் படகுகள் எல்லை தாண்டி நமது நாட்டின் கடல் வளங்களை அள்ளிச் செல்வது , இரண்டாவது சட்டத்துக்கு விரோதமான முறையில் டைனமைட் பாவித்து மீன் பிடிப்பது, மூன்றாவது தங்கூஸ் வலைகளை பயன்படுத்துவது, நான்காவது வர்ணநிற( அழகு ) மீன்களைப் பிடிப்பது முதலியன காணப்படுகின்றன.
கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல், சுருக்கு வலையில் மீன் பிடிப்பதாகும். இதன் காரணமாக கடல் வளம் வரம்பை மீறிச் சுரண்டப் படுவதோடு 100 ஏழை மீனவர் பிடிக்கும் மீன்களை ஒரே ஒரு பெரும் முதலாளியின் சுருக்கு வலைப் படகு பிடிக்கின்றது.
சுருக்கு வலை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்காக அரசு சில வரன்முறைகளுடன் ஒப்புதல் கொடுத்துள்ளது. ஆனால் அரசு விதித்த வரன்முறைகள் மற்றும் விதிமுறைகளை சுருக்கு வலை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் பின்பற்றுவதில்லை. அவர்கள் ஆழ்கடலில் மட்டுமன்றி கரையை அண்டிய பகுதிகளிலும் சிறிய மீன்களை கூட அள்ளி விடுகிறார்கள்.
இதன் காரணமாக இச்சிறிய மீன்களை உணவாக கொள்ளும் பெரிய மீன்களுக்கு உணவு இல்லாமல் கடற் பரப்பில் உணவுச் சங்கிலியில் சமநிலை அற்ற தன்மை ஏற்படுகின்றது. இது சுற்றுச்சூழலை பாதிக்கும் ஒரு விடயமாகும்.
எனவே இத்தகைய சுருக்கு வலை மீன்பிடி முறையினை முழுமையாக தடை செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்.
கடலோரப் பாதுகாப்பு படையினரால் இந்த சுருக்கு வலை மீன்பிடியை தடுக்க முடியாமல் இருப்பதனால் கடலோர பாதுகாப்பு படையினர் மட்டுமன்றி ஓர் இணைந்த குழு ஒன்றை உருவாக்கி இந்த விடயங்களை கண்காணிக்க வேண்டும்.
கடற்தொழில் மீன்பிடிப்பாளர் போன்றே நன்னீர் மீன்பிடிப்பாளரும் பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் கும்புறுப்பிட்டி கிழக்கு கிராம சேவை பிரிவில் அமைந்துள்ள றைகம் உப்பளத்தை 2009 ஆம் ஆண்டு அமைத்த பொழுது உப்பளத்துக்கு 456 ஏக்கரும் தொழிற்சாலைக்கு 26 ஏக்கரும் ஆக மொத்தம் 482 ஏக்கர் ஒதுக்கப்பட்டது.
இப்பொழுது அந்த நிறுவனம் அதனுடன் இணைந்ததாக 1806 ஏக்கர் நிலத்தை பிடித்து வைத்துள்ளது. இதனால் 240 நன்னீர் மீன்பிடிக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தினை இழந்து நிற்கின்றன.
றைகம் நிறுவனம் தொடங்கும் பொழுது இந்த நன்னீர் மீன்பிடியாளருக்கு உறுதியளித்தவாறு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை, மீன்பிடி படகுகளுக்கான இறங்குதுறை அமைத்து கொடுக்கப்படவில்லை,. மீனவ சங்கங்களுக்கு ஆண்டுதோறும் வழங்குவதாக கூறிய ஒரு மில்லியன் ரூபா பணமும் வழங்கப்படவில்லை.
இந்த விடயத்தில் அரசு தலையிட்டு நன்னீர் மீனவர்களின் நலன்களை பாதுகாக்க ஆவன செய்ய வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.
மாகாண சபையின் கீழ் இயங்கும் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மீனவர்களின் நலன்களை நீண்ட காலமாகப் பேணி வருகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு மாற்றாக நடுவண் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிராமிய மீனவர் அமைப்பு ( Rural Fishermen Organisation) என்னும் அமைப்பை உருவாக்குவதனை உடனே நிறுத்த வேண்டும்.
மாகாண சபை அதிகாரத்துக்கு உட்பட்டு ஒவ்வொரு மீனவக் கிராமங்களில் இருந்தும் இயங்கி வரும் மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீனவர்களுக்கான அபிவிருத்திச் செயன்முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் அனைத்து மாகாண மட்டங்களிலும் மீனவர்களின் தேவைகள் எளிதாக நிறைவு செய்யப்படும்.
மீன்பிடித் துறையில் முதன்மையான ஒரு கூறாக மீன்களை பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் காணப்படுகிறது. மீனவர்களுக்கு இதற்கான தகுந்த பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.மேலும் மீன்களை பாதுகாக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் பெரும்பாலும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படுகிறது . இந்த ஐஸ் கட்டிகள் தகுந்த தரத்தை கொண்டிருப்பதில்லை என்பதோடு விலையும் அதிகமாக உள்ளது. இதனைத் தடுக்கும் பொருட்டு அரசு, ஐஸ் கட்டி தொழிற்சாலைகளை நிறுவித் தகுந்த தரம் மற்றும் நியாய விலையில் மீனவர்களுக்கு அவை கிடைக்க வழி செய்ய வேண்டும். இதன் மூலம் அரசுக்கும் வருமானம் கிடைக்கும்.
மேலும் கடல் வளங்களை பெறுமதி கூட்டுவதற்கான நடைமுறைகள் சார்ந்த ஒதுக்கீடுகள் எதுவும் இந்த பாதீட்டில் மேற்கொள்ளப்படவில்லை.
ஒலுவில் பகுதியில் கட்டப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகமானது பல ஆண்டுகளாக முடிவுறாத நிலையில் உள்ளது. இதனை விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆவன செய்ய வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மீனவர்களில் பெரும்பான்மையோர் நவீன மீன்பிடி முறைகள் எதனையும் பின்பற்றுவதில்லை. காலையில் சிறிய படகுகளில் கடலுக்குச் சென்று மாலை திரும்பி வருகின்ற அன்றாட வருவாய்க்கான தொழில் செய்பவர்களாகவே காணப்படுகின்றனர்.
இம் மீனவர்கள் பன்னாள் மீன்பிடிப் படகுகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதில்லை என்பதோடு அதற்கான தொழில்நுட்ப அறிவோ முதலீட்டு வசதிகளோ அவர்களிடம் இல்லை. இதனால் இம்மீனவர்களது வாழ்க்கைத் தரம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. இதனை மேம்படுத்த அரசு ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
திருகோணமலையில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அடிக்கடி காணாமல் போகின்றனர். அப்படி துன்பப் பட்டு போராடிப் பிடித்த மீன்களுக்கு சரியான விலையும் கிடைப்பதில்லை.
பெரும்பாலும் இடைத் தரகர்களே இலாபம் ஈட்டுகின்றனர்.
இதற்கான தீர்வாக, ஏழை மீனவர்களுக்கு மீன்பிடி படகுகள் மற்றும் பன்னாள் மீன்பிடிப் படகுகள் கொள்வனவு செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன் கொடுக்கும் திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மேலும் பன்னாள் மீன்பிடிப் படகுத் துறைகள், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத்துறை முகத்துவாரம், சம்பூர், சல்லி மற்றும் நாவற்சோலை முதலிய மீன்பிடி கிராமங்களில் நிறுவப்பட வேண்டும் என்பதோடு, பன்னாள் மீன்பிடி படகுகளை பயன் படுத்துவத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். இதனால் கடற் தொழிலையும் மீனவர் பொருண்மியத்தையும் மேம்படுத்த முடியும், அத்தோடு கடலில் காணாமற் போவோரின் எண்ணிக்கையையும் குறைக்கலாம்.
திருகோணமலை மாவட்டத்தில் வாழும் கடற் தொழிளார்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. எனவே இவர்களுக்கு தனியான மீனவர் வீடமைப்பு திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும், அதற்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்குவதைப் போல மீனவர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்குவது மீன்பிடியைக் கூட்ட உதவும். எனவே இவர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
திருகோணமலை மாவட்டத்தில் 64,957 ஏக்கர் நீர்ப் பரப்பை கொண்ட நன்னீர் மீன் வளர்க்க கூடிய 437 நீர்நிலைகள் உள்ளன. இவை அனைத்திலும் மீன் வளர்க்க மீனவர்களுக்கு இலவசமாக மீன் குஞ்சுகள் வழங்கி ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும்.
முற்கூறிய வழிமுறைகள் மூலம் இப்பொழுது திருகோணமலை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பிடிக்கப்படும் மீனின் அளவை பன்மடங்காக அதிகரிக்க முடியும் எனக்கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன் என்றார்.
மீனவர்களுக்காக வீட்டுத் திட்டங்களுடன் கூடிய எரிபொருள் மானியங்கள்: குகதாசன் எம்.பி கோரிக்கை. மீனவர்களுக்காக வீட்டுத் திட்டங்களுடன் கூடிய எரிபொருள் மானியங்களையும் வழங்க வேண்டும் என தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.நான் பிரதிநிதித்துவப்படுத்தும் திருகோணமலை மாவட்டமானது 141 கி.மீ நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது. திருகோணமலை மாவட்டம் அமைந்துள்ள கிழக்கு மாகாணம் ஆனது 431 கி.மீ நீளமுள்ள கடற்கரையை கொண்டதாகும். கிழக்கில் மீன்பிடித் தொழிலும் அது சார்ந்த பொருளாதாரமும் மிக முதன்மையான ஒன்றாகும். திருகோணமலையில் 23,975 கடற் தொழிலில் ஈடுபடும் குடும்பங்கள் உள்ளன. கிழக்கு மாகணத்தில் 67,355 கடற்தொழிலில் ஈடுபடும் குடும்பங்கள் உள்ளன. இந்த அரசால் முன்வைக்கப்பட்டுள்ள பாதீட்டில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 6,213 மில்லியன் ரூபா மீண்டெழும் செலவுக்காகவும் 5,227 மில்லியன் ரூபா மூலதன செலவுக்காகவும் மொத்தமாக 11,440 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 428 மில்லியன் ரூபா கூடுதலானது ஆகும். இது வரவேற்கத்தக்க விடயமாகும்.மீண்டெழும் செலவுக்காக 2024 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 2,580 மில்லியன் ரூபா ஆல் அதிகரிக்கப்பட்டுள்ள பொழுதிலும் மூலதன நிதி ஒதுக்கீடானது இந்த ஆண்டு பாதீட்டில் 2,152 மில்லியன் ரூபா ஆல் குறைக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற விடயம் அல்ல. இந்த அமைச்சுக்கான மொத்த ஒதுக்கீடு பாதீட்டில் 0.3 % ஆக காணப்படுவது கவலை தரும் விடயமாகும். மேலும் மூலதன ஒதுக்கீடு 0.12 % ஆக காணப்படுவது அதனைவிட கவலை தரும் விடயமாகும். இந்த விடயத்தில் கடற்றொழில் அமைச்சரும் நிதி அமைச்சரும் தமது பார்வையை செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.மீன்பிடித் துறை, இன்று எதிர்நோக்கும் பெரும் சிக்கல்களாக முதலாவது இந்திய விசைப் படகுகள் எல்லை தாண்டி நமது நாட்டின் கடல் வளங்களை அள்ளிச் செல்வது , இரண்டாவது சட்டத்துக்கு விரோதமான முறையில் டைனமைட் பாவித்து மீன் பிடிப்பது, மூன்றாவது தங்கூஸ் வலைகளை பயன்படுத்துவது, நான்காவது வர்ணநிற( அழகு ) மீன்களைப் பிடிப்பது முதலியன காணப்படுகின்றன.கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல், சுருக்கு வலையில் மீன் பிடிப்பதாகும். இதன் காரணமாக கடல் வளம் வரம்பை மீறிச் சுரண்டப் படுவதோடு 100 ஏழை மீனவர் பிடிக்கும் மீன்களை ஒரே ஒரு பெரும் முதலாளியின் சுருக்கு வலைப் படகு பிடிக்கின்றது.சுருக்கு வலை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்காக அரசு சில வரன்முறைகளுடன் ஒப்புதல் கொடுத்துள்ளது. ஆனால் அரசு விதித்த வரன்முறைகள் மற்றும் விதிமுறைகளை சுருக்கு வலை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் பின்பற்றுவதில்லை. அவர்கள் ஆழ்கடலில் மட்டுமன்றி கரையை அண்டிய பகுதிகளிலும் சிறிய மீன்களை கூட அள்ளி விடுகிறார்கள். இதன் காரணமாக இச்சிறிய மீன்களை உணவாக கொள்ளும் பெரிய மீன்களுக்கு உணவு இல்லாமல் கடற் பரப்பில் உணவுச் சங்கிலியில் சமநிலை அற்ற தன்மை ஏற்படுகின்றது. இது சுற்றுச்சூழலை பாதிக்கும் ஒரு விடயமாகும். எனவே இத்தகைய சுருக்கு வலை மீன்பிடி முறையினை முழுமையாக தடை செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும். கடலோரப் பாதுகாப்பு படையினரால் இந்த சுருக்கு வலை மீன்பிடியை தடுக்க முடியாமல் இருப்பதனால் கடலோர பாதுகாப்பு படையினர் மட்டுமன்றி ஓர் இணைந்த குழு ஒன்றை உருவாக்கி இந்த விடயங்களை கண்காணிக்க வேண்டும்.கடற்தொழில் மீன்பிடிப்பாளர் போன்றே நன்னீர் மீன்பிடிப்பாளரும் பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்கின்றனர்.எடுத்துக்காட்டாக, திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் கும்புறுப்பிட்டி கிழக்கு கிராம சேவை பிரிவில் அமைந்துள்ள றைகம் உப்பளத்தை 2009 ஆம் ஆண்டு அமைத்த பொழுது உப்பளத்துக்கு 456 ஏக்கரும் தொழிற்சாலைக்கு 26 ஏக்கரும் ஆக மொத்தம் 482 ஏக்கர் ஒதுக்கப்பட்டது. இப்பொழுது அந்த நிறுவனம் அதனுடன் இணைந்ததாக 1806 ஏக்கர் நிலத்தை பிடித்து வைத்துள்ளது. இதனால் 240 நன்னீர் மீன்பிடிக் குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தினை இழந்து நிற்கின்றன. றைகம் நிறுவனம் தொடங்கும் பொழுது இந்த நன்னீர் மீன்பிடியாளருக்கு உறுதியளித்தவாறு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை, மீன்பிடி படகுகளுக்கான இறங்குதுறை அமைத்து கொடுக்கப்படவில்லை,. மீனவ சங்கங்களுக்கு ஆண்டுதோறும் வழங்குவதாக கூறிய ஒரு மில்லியன் ரூபா பணமும் வழங்கப்படவில்லை.இந்த விடயத்தில் அரசு தலையிட்டு நன்னீர் மீனவர்களின் நலன்களை பாதுகாக்க ஆவன செய்ய வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.மாகாண சபையின் கீழ் இயங்கும் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மீனவர்களின் நலன்களை நீண்ட காலமாகப் பேணி வருகின்றன. இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு மாற்றாக நடுவண் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கிராமிய மீனவர் அமைப்பு ( Rural Fishermen Organisation) என்னும் அமைப்பை உருவாக்குவதனை உடனே நிறுத்த வேண்டும். மாகாண சபை அதிகாரத்துக்கு உட்பட்டு ஒவ்வொரு மீனவக் கிராமங்களில் இருந்தும் இயங்கி வரும் மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீனவர்களுக்கான அபிவிருத்திச் செயன்முறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் அனைத்து மாகாண மட்டங்களிலும் மீனவர்களின் தேவைகள் எளிதாக நிறைவு செய்யப்படும்.மீன்பிடித் துறையில் முதன்மையான ஒரு கூறாக மீன்களை பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் காணப்படுகிறது. மீனவர்களுக்கு இதற்கான தகுந்த பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.மேலும் மீன்களை பாதுகாக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும் ஐஸ் கட்டிகள் பெரும்பாலும் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து பெறப்படுகிறது . இந்த ஐஸ் கட்டிகள் தகுந்த தரத்தை கொண்டிருப்பதில்லை என்பதோடு விலையும் அதிகமாக உள்ளது. இதனைத் தடுக்கும் பொருட்டு அரசு, ஐஸ் கட்டி தொழிற்சாலைகளை நிறுவித் தகுந்த தரம் மற்றும் நியாய விலையில் மீனவர்களுக்கு அவை கிடைக்க வழி செய்ய வேண்டும். இதன் மூலம் அரசுக்கும் வருமானம் கிடைக்கும்.மேலும் கடல் வளங்களை பெறுமதி கூட்டுவதற்கான நடைமுறைகள் சார்ந்த ஒதுக்கீடுகள் எதுவும் இந்த பாதீட்டில் மேற்கொள்ளப்படவில்லை.ஒலுவில் பகுதியில் கட்டப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகமானது பல ஆண்டுகளாக முடிவுறாத நிலையில் உள்ளது. இதனை விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஆவன செய்ய வேண்டும்.திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மீனவர்களில் பெரும்பான்மையோர் நவீன மீன்பிடி முறைகள் எதனையும் பின்பற்றுவதில்லை. காலையில் சிறிய படகுகளில் கடலுக்குச் சென்று மாலை திரும்பி வருகின்ற அன்றாட வருவாய்க்கான தொழில் செய்பவர்களாகவே காணப்படுகின்றனர். இம் மீனவர்கள் பன்னாள் மீன்பிடிப் படகுகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதில்லை என்பதோடு அதற்கான தொழில்நுட்ப அறிவோ முதலீட்டு வசதிகளோ அவர்களிடம் இல்லை. இதனால் இம்மீனவர்களது வாழ்க்கைத் தரம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளது. இதனை மேம்படுத்த அரசு ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். திருகோணமலையில் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அடிக்கடி காணாமல் போகின்றனர். அப்படி துன்பப் பட்டு போராடிப் பிடித்த மீன்களுக்கு சரியான விலையும் கிடைப்பதில்லை.பெரும்பாலும் இடைத் தரகர்களே இலாபம் ஈட்டுகின்றனர்.இதற்கான தீர்வாக, ஏழை மீனவர்களுக்கு மீன்பிடி படகுகள் மற்றும் பன்னாள் மீன்பிடிப் படகுகள் கொள்வனவு செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன் கொடுக்கும் திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் பன்னாள் மீன்பிடிப் படகுத் துறைகள், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத்துறை முகத்துவாரம், சம்பூர், சல்லி மற்றும் நாவற்சோலை முதலிய மீன்பிடி கிராமங்களில் நிறுவப்பட வேண்டும் என்பதோடு, பன்னாள் மீன்பிடி படகுகளை பயன் படுத்துவத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். இதனால் கடற் தொழிலையும் மீனவர் பொருண்மியத்தையும் மேம்படுத்த முடியும், அத்தோடு கடலில் காணாமற் போவோரின் எண்ணிக்கையையும் குறைக்கலாம். திருகோணமலை மாவட்டத்தில் வாழும் கடற் தொழிளார்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. எனவே இவர்களுக்கு தனியான மீனவர் வீடமைப்பு திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும், அதற்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்குவதைப் போல மீனவர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்குவது மீன்பிடியைக் கூட்ட உதவும். எனவே இவர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.திருகோணமலை மாவட்டத்தில் 64,957 ஏக்கர் நீர்ப் பரப்பை கொண்ட நன்னீர் மீன் வளர்க்க கூடிய 437 நீர்நிலைகள் உள்ளன. இவை அனைத்திலும் மீன் வளர்க்க மீனவர்களுக்கு இலவசமாக மீன் குஞ்சுகள் வழங்கி ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும். முற்கூறிய வழிமுறைகள் மூலம் இப்பொழுது திருகோணமலை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பிடிக்கப்படும் மீனின் அளவை பன்மடங்காக அதிகரிக்க முடியும் எனக்கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன் என்றார்.