• Sep 20 2024

ஐந்து நிபந்தனைகளை அரசு ஏற்றால் தனியார் மயமாக்கலுக்கு பூரணமான ஆதரவு- உதய கம்மன்பில!samugammedia

Sharmi / Apr 3rd 2023, 5:15 pm
image

Advertisement

அரசாங்கம் ஐந்து நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் தனியார் மயமாக்கலுக்கு தமது பூரணமான ஆதரவை தருவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு அறிவித்திருந்தார்.

(01)தனியார் மயமாக்கல் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும்.
(02)தனியார் மயமாக்கலின் விளைவாக, மக்களைச் சுரண்டும் சந்தை உருவாகுவதைத் தடுக்க,உண்மையான ஒழுங்குமுறை இருக்க வேண்டும்.
(03) இந்த நிறுவனங்கள் தாய்நாட்டின் எதிரிகளின் கைகளில் சிக்கி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தனியார்மயமாக்கல் நடைபெறக்கூடாது.
(04) தனியார் துறையில் பேரம் பேசுவதைத் தடுக்கவும், அவசரநிலைகளை எதிர்கொள்ளவும், நிறுவனங்களை தனியார்மயமாக்காமல், புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பளித்து, அதிகபட்ச போட்டி சந்தையை வழங்க வேண்டும்.
(5) மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் அரசால் தக்கவைக்கப்பட வேண்டும் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பாக பொது நிறுவனங்களில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி திறமையற்ற அதிகாரிகளே உள்ளதாகவும் இதில் உள்ளவர்கள் பாரிய ஊழல் மோசடியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த உண்மைகள் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தாது என்றும் ஆனால் பெரும்பான்மையான நிறுவனங்களில் இது நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த ஐந்து நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் உடன்பட்டால் தமது பூரணமான ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து நிபந்தனைகளை அரசு ஏற்றால் தனியார் மயமாக்கலுக்கு பூரணமான ஆதரவு- உதய கம்மன்பிலsamugammedia அரசாங்கம் ஐந்து நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் தனியார் மயமாக்கலுக்கு தமது பூரணமான ஆதரவை தருவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு அறிவித்திருந்தார்.(01)தனியார் மயமாக்கல் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும்.(02)தனியார் மயமாக்கலின் விளைவாக, மக்களைச் சுரண்டும் சந்தை உருவாகுவதைத் தடுக்க,உண்மையான ஒழுங்குமுறை இருக்க வேண்டும். (03) இந்த நிறுவனங்கள் தாய்நாட்டின் எதிரிகளின் கைகளில் சிக்கி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தனியார்மயமாக்கல் நடைபெறக்கூடாது. (04) தனியார் துறையில் பேரம் பேசுவதைத் தடுக்கவும், அவசரநிலைகளை எதிர்கொள்ளவும், நிறுவனங்களை தனியார்மயமாக்காமல், புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பளித்து, அதிகபட்ச போட்டி சந்தையை வழங்க வேண்டும். (5) மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் அரசால் தக்கவைக்கப்பட வேண்டும் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக பொது நிறுவனங்களில் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி திறமையற்ற அதிகாரிகளே உள்ளதாகவும் இதில் உள்ளவர்கள் பாரிய ஊழல் மோசடியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.இந்த உண்மைகள் அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் பொருந்தாது என்றும் ஆனால் பெரும்பான்மையான நிறுவனங்களில் இது நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே இந்த ஐந்து நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் உடன்பட்டால் தமது பூரணமான ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement