• Mar 26 2025

அவுஸ்ரேலிய பிரஜை தொடர்பான மோசடி வழக்கில் இருந்து கம்மன்பில விடுதலை..!

Sharmi / Mar 24th 2025, 2:15 pm
image

அவுஸ்ரேலிய நாட்டவரின் நிறுவனம் தொடர்பான நிதி மோசடி வழக்கில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் மற்றொரு சந்தேக நபரை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று விடுவித்தது.

மோசடி பங்கு பரிவர்த்தனை தொடர்பாக பிவிதுரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 09 ஆண்டு விசாரணைக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய  நாட்டவரின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி அவரது நிறுவனத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கான சட்ட ஆவணத்தைத் தயாரித்ததாக உதய கம்மன்பில மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதன் பின்னர், செப்டம்பர் 26, 1996 முதல் செப்டம்பர் 21, 1997 வரை ரூ. 21 மில்லியன் வரை நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக கம்மன்பில மீது குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்ரேலிய பிரஜை தொடர்பான மோசடி வழக்கில் இருந்து கம்மன்பில விடுதலை. அவுஸ்ரேலிய நாட்டவரின் நிறுவனம் தொடர்பான நிதி மோசடி வழக்கில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் மற்றொரு சந்தேக நபரை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று விடுவித்தது.மோசடி பங்கு பரிவர்த்தனை தொடர்பாக பிவிதுரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 09 ஆண்டு விசாரணைக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.2016 ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய  நாட்டவரின் கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி அவரது நிறுவனத்திற்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கான சட்ட ஆவணத்தைத் தயாரித்ததாக உதய கம்மன்பில மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அதன் பின்னர், செப்டம்பர் 26, 1996 முதல் செப்டம்பர் 21, 1997 வரை ரூ. 21 மில்லியன் வரை நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக கம்மன்பில மீது குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement