• Mar 01 2025

தமிழ் மக்களுக்கு உலகம் அமைத்துக் கொடுத்த சர்வதேச மேடையே ஜெனீவா - சி. அ. யோதிலிங்கம்

Tharmini / Mar 1st 2025, 4:30 pm
image

தமிழ் மக்களுக்கு உலகம் அமைத்துக் கொடுத்த சர்வதேச மேடையே ஜெனீவா ஜெனிவா என  அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அதன் முழு விபரமும் வருமாறு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி 24 ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. இக்கூட்டத் தொடர் ஏப்பிரல் 07 திகதி வரை நடைபெற இருக்கின்றது. கடந்த 25 ம் திகதி இலங்கையின் வெளிநாட்டமைச்சர் விஜித ஹெரத் உரையாற்றியுள்ளார்.

முதல் மூன்று நாட்களும் உலக நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றியுள்ளனர.; மார்ச் 03 ம்; திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை வெளியிடுவார்.

அதன் பின்னர் பல்வேறு உறுப்பு நாடுகளும் தத்தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும். தொடர்ந்து சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளும் உரையாற்றுவர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் தனது ஆரம்ப உரையில் இலங்கை தொடர்பாக எதுவும் கூறவில்லை.

ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகம் காணாமல் போனவர்களது உறவுகளின் போராட்டங்களும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கருத்துக்களும் சர்வதேச செயற்பாடுகளில் பங்கேற்பவர்களின் கருத்துக்களும், இலங்கை விவகாரத்தில் உலக அவதானத்தை குவித்துள்ளது என தெரிவித்துள்ளது. இனி வாய்மூல அறிக்கையில் இலங்கை தொடர்பான அவரது நிலைப்பாடுகள் வெளிவரும்

இலங்கை வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹெரத்தின்; உரையில் எதிர்பார்த்தவைகள் தான் வெளிப்பட்டுள்ளன. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை பொறுப்பு கூறல் விவகாரத்தில் முக்கிய செயல்பாடாக கூறியதோடு வடக்கு உட்பட நாடு தழுவிய ரீதியில் மக்கள் தந்த ஆணை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

இவை தவிர பொறுப்புக் கூறல் தொடர்பாக காத்திரமான உறுதி மொழிகளையோ, நல்லிணக்கம் தொடர்பாக காத்திரமான செயல் திட்டங்களையோ அவர் முன்வைக்கவில்லை. உண்மையில் பொறுப்புக்கூறல் தொடர்பாகவோ நல்லிணக்கம் தொடர்பாகவோ முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எவற்றையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கப் போவதில்லை. அதற்கான துணிவும், மனவிருப்பும் அதனிடம் இருப்பதாக கூறிவிட முடியாது.

போர்க்குற்றங்கள் என்பவை சிறீலங்கா அரசின் தீர்மானங்களாகும.

அரசின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பே அரசாங்கங்களுக்கு உள்ளதால் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கங்களும் வெளி அழுத்தங்களின்றி வினைத்திறனான செயல்பாடுகளை முன்னெடுக்க மாட்டா. இது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும் தெரியும். அதற்குப் பின்னால் உள்ள மேற்குலகத்திற்கும் தெரியும், 

சர்வதேச அரசியலே சர்வதேச நீதியாக இருப்பதனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கையிலும் பெரிதாக எதுவும் இருக்காது. முன்னைய தீர்மானங்களை நினைவூட்டுவதும் அதனை நிறைவேற்றும்படி வேண்டுகோள் விடுப்பதுமே பிரதானமாக இருக்கும். அதைவிட இராஜதந்திரிகளின் உரையில் வழமையாக இருக்கின்ற நல்ல விடயங்களை மெச்சுவதும், குறைபாடுகளை நோகாத வகையில் சுட்டிக்காட்டி வேண்டுகோள் விடுப்பதும் இருக்கும்

தமிழ் மக்களுக்கு இதில் சார்பாக இருக்கப் போகின்ற விடயம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான கோவையை மூடாமல் இருப்பது தான். புவிசார் அரசியல் போட்டியும், பூகோள அரசியல் போட்டியும் இலங்கையில் தொடர்ந்து இருக்கும் வரை கோவையை மூடப் போவதில்லை. தெளிவாகக் கூறுவதாயின் இலங்கையில் சீனப் பிரசன்னம் இருக்கும் வரை கோவை மூடப்படாது.

இலங்கை தொடர்பாக மேற்குலகத்திற்கும் சீனாவுக்;கும் இடையிலான போட்டியின் உயர்வு தாழ்வுக்கு ஏற்ப அழுத்தங்களின் உயர்வு தாழ்வுகளும் இருக்கும். அதுவரை விவகாரம் அடுத்த கட்டத்திற்கு நகராது. அடுத்த கட்டம் என்பது சிறீPலங்கா அரசாங்கம் மீது வன்மையான அழுத்தங்களை கொண்டு வருவது தான்.

இது குற்றவியல் நீதிமன்றத்திற்கு விவகாரத்தை கொண்டு செல்வதாகவோ, நாடுகள் தங்கள் தங்கள் நீதிமன்றங்களில் நடவடிக்கைகளை எடுப்பதாகவோ இருக்கும். இதன் உயர்நிலை என்பது பொருளாதாரத் தடைகளாக இருக்கும். இலங்கை தீவு முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வருமானால் இந்த அடுத்த கட்டத்தை நோக்கி மேற்குலகம் நகரும்.

தற்போதைய நிலையில் அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகியுள்ளமையும் மென் அழுத்தத்தை வலுவிழக்கச் செய்யும். அமெரிக்காவைப் போல தற்போது பொறுப்பேற்றிருக்கும் பிரிட்டன் வினைத் திறனுடன் செயல்படும் என கூற முடியாது.

தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ளும் உருப்படியான விடயம் சாட்சிய சேகரிப்பு தான. அது வலுவான வினைத்திறனுடன் இடம்பெறுகின்றது  என கூற முடியாது. எனினும் பேரவை அதனை கைவிடப்போவதில்லை.

தமிழ் மக்களை பொறுத்தவரை இது சற்று ஆறுதலான விடயம் தான். இந்த விவகாரத்தில் இந்தியக் குறுக்கீடுகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. போர்க்குற்ற விசாரணையை இந்தியா பெரியளவிற்கு விரும்பவில்லை. போர்க்குற்ற விசாரணையை நீட்சி செய்ய முயன்றால் இந்தியாவும் அதற்குள் மாட்டுப்பட வேண்டிவரும.

இந்திய அமைதிப்படை கால குற்றங்கள் தவிர இறுதிப்போரக்காலத்திலும் இந்தியாவின் பங்கு கணிசமாக இருந்தது. முழுமையான விசாரணை நடாத்தின் அவையும் வெளி வரலாம். இவற்றை விட இந்தியா தனது சொந்த நாட்டில் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

காஸ்மீர் தொடக்கம் வடகிழக்கு மாநிலங்களான அசாம,  மணிப்பூர், நாகலாந்து வரை அவை பரவி இருக்கின்றது. சிறீPலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கு அழுத்தம் கொடுத்தால் அவை பற்றியும் விசாரிக்க வேண்டிய நிலை வரும் என இந்தியா அஞ்சலாம்.

இதனால் இலங்கையின் பொறுப்புக் கூறல் விடயத்தில் காத்திரமான எவற்றையும் இந்தியா செய்யப்போவதில்லை.

நல்லிணக்க செயற்பாட்டிலும் இந்தியா 13-வது திருத்தத்திற்கு மேல் நகராது. தற்போது இந்தியா சீனாவுக்கு போட்டியாக தனக்கான தளங்களை கைப்பற்ற நினைப்பதால் சிறீலங்கா அரசுடன் பகைமை உறவினைப் பின்பற்றாது. அதேபோல “இலங்கை தொடர்பான தனது வெளிநாட்டுக்கொள்கையில் இலங்கையின் ஆள்புல மேன்மை இறைமை என்பதை பேணுவதோடு தமிழர்களின் சமத்துவம் பேணப்பட வேண்டும”; என்பதையும் கைவிடாது.

சீனாவின் மேலாதிக்கம் இலங்கை தீவில் உறுதிப்படும் வரை தமிழரின் சமத்துவம் பேணல் என்ற கொள்கை வெறும் கறி வேப்பிலையாகத்தான் இருக்கும்.

யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணை ஸ்தானிகர் தமிழ் மக்கள் மீதான இந்தியாவின் அக்கறை நிரந்தரமானது என புகழந்;தாலும் அவை பெறும் வார்த்தைகள் தான். இவ்வளவு காலமும் இன முரண்பாட்டு விவகாரத்தில் தான் மட்டுமே சம்பந்தப்பட வேண்டும் என்ற நிலைக்கு அச்சுறுத்தல் சீனாவின் தேசிய இனங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரின் வருகையுடன் பின்னுக்குப் போகப் போகின்றது.

“நிரந்தரமானது” என்ற வார்த்தை பிரயோகம் இந்தியத் துணை ஸ்தானிகரால் இந்த வருகையை உட்டித்தான் பயன்படுத்தப்பட்டது

தமிழ் அரசியல்வாதிகள் தமது சொந்த நலன்; காரணமாக இந்தியாவிடம் நம்பிக்கை வைப்பதாகக்கூறினாலும் தமிழ் மக்களிடம் அந்த நம்பிக்கை எதுவும் கிடையாது. தமிழ் மக்கள் இந்தியாவினால் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்றே கருதுகின்றார்கள்.

தற்போது தமிழ் அரசியல்வாதிகளும் பெரியளவிற்கு இந்தியாவின் பிடியில் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை இந்தியா விரும்பவில்லை. இந்தியா பல வழிகளினாலும் தமிழ் அரசியல்; வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்த போதும் தமிழ் அரசியல்வாதிகள் பலர் நழுவியே உள்ளனர்.

இந்தியா சஜித் பிறேமதாசா வெல்வதையே விரும்பியிருந்தது. அதற்காக சகல வழிகளிலும் செயல்பட்டது. தற்போது தமிழ் அரசியல் தங்களது பிடிக்குள் இல்லாததினால் மலையக அரசியலை வளைக்கும் முயற்சி நடைபெறுகின்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரசிலும் இந்திய செல்வாக்கு அபரிதமாக உள்ளது

தமிழ்த்தரப்பின் ஜெனிவா தொடர்பான அக்கறையும் செயற்பாடுகளும் அண்மைக்காலமாக குறைந்தே வருகின்றது. பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கில் அதிக ஆசனங்களை பெற்றுக் கொண்டமை, ஒருங்கிணைந்த தமிழ் அரசியல் இல்லாமை, பிரதான தமிழ்க் கட்சியான தமிழரசுக் கட்சியின் உட்கட்சி சண்டை, புலம்பெயர் தரப்பில் நிலவும் குழு அரசியல் என்பன இதற்கு காரணங்களாக இருக்கலாம். ஜெனிவாவின் முக்கியத்துவத்தினை அறிவியல் ரீதியாக புரிந்து கொள்ளாமையையும் இதற்குள் அடக்கலாம்

இவ்வளவு காலமும் தமிழ்த் தரப்பு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான கூட்டங்களில் உரையாற்றுதல் உப கூட்டங்களை நடாத்துதல், போராட்டங்களை நடாத்துதல், போர் அவலம் பற்றிய கண்காட்சிகளை நடாத்துதல் என பங்களிப்புச் செய்திருந்தது.

பிரதான கூட்டங்களில் நாடுகள் என்ற ரீதியில் பங்கு பற்ற முடியாவிட்டாலும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மூலம் தமிழ்த்; தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் உரையாற்றியிருந்தார். இதைவிட தமிழக மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழ் மக்களுக்காக உரையாற்றியிருந்தனர்.

உப கூட்டங்களில் பங்கு பற்றுதல் கணிசமானளவு இடம்பெற்றிருந்தமை சர்வதேச மயப்படுத்த உதவி இருந்தது. போர் அவல கண்காட்சிகளும் சர்வதேச சக்திகளின் கவனத்தைப் பெற்றிருந்தன. போராட்டங்களும் பல தடவைகள் இடம்பெற்றிருந்தமை வலுவான கவனத்தைப் பெற்றிருந்தன.

ஜெனிவா தமிழ் மக்களைப் பொறுத்தவரை பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் முதலாவது அது தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளி உலகத்திற்கு கொண்டு செல்வதற்கு கிடைத்த மிகப்பெரிய சர்வதேச மேடையாக உள்ளது. ஒருவகையில் தமிழ் மக்களுக்காக சர்வதேசம் அமைத்துக் கொடுத்த மேடை எனலாம்.

ஜெனிவா கூட்டங்களின் போது முழு உலகத்தின் கவனமும் ஜெனிவா பக்கம் திரும்பியிருக்கும். தேசிய பிரச்சினை சாராம்சத்தில் சர்வதேசப் பிரச்சினை என்ற வகையில் ஜெனிவா இந்த இடத்தில் பெரிய பங்கினை தமிழ் அரசியலில் வகிக்கின்றது.

இதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் தற்போது சர்வதேசத்தின் அவதானத்தை பெற்றுள்ளது என அது கூறியிருக்கின்றது.

ஜெனிவா தமிழ்த்தரப்பு சர்வதேச ரீதியாக உறவுகளைப் பலப்படுத்த உதவுகின்றது. நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வதேச சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சர்வதேச ஊடகவியலாளர்கள் என உறவுகளையும் தொடர்புகளையும் வலுப்படுத்த உதவுகின்றது. சர்வதேச மயப்படுத்தலுக்கு தொடர்புகள் மிகவும் அவசியமானவையாகும்.

மூன்றாவது நட்பு சக்திகளை அடையாளம் காணவும், தமிழ் மக்களின் அரசியல் தொடர்பாக அவர்களை அணிதிரட்டவும் ஜெனிவா முக்கிய களமாகின்றது. இக்கட்டுரையாளர் அடிக்கடி கூறுகின்ற விடயம் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனம்.

அது தனது அக ஆற்றலை மட்டும் வைத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல முடியாது. புற ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். புற ஆற்றலை தருவதில் முக்கியமானவர்கள் உலகத் தமிழர்களும், உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் தான்.

இங்கே உலக முற்போக்கு ஜனநாயக சக்திகள் தமிழ் மக்களின் நல்ல நட்புச்சக்திகள். இந்த நட்புச் சக்திகளை அடையாளம் காணவும் அணி திரட்டவும் ஜெனிவா முக்கிய களமாகின்றது.

நான்காவது நிலமும், புலமும், தமிழகமும் ஒருங்கிணைவதற்கும் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுப்பதற்கும் ஜெனிவா வலிமையான வாய்ப்புகளை கொடுக்கின்றது. இந்த மூன்று தரப்பும் சந்திக்கின்ற களமாக ஜெனிவா உள்ளது. ஒருவகையில் ஜெனிவாவை அனைத்துலக தமிழ்த்; தேசிய சக்திகளும், ஆர்வலர்களும் சந்;திக்கும் மையம் எனலாம். நிலமும், புலமும், தமிழகமும் ஒருங்கிணையாமல் தமிழ் அரசியலை ஒருபோதும் முன்நகரத்த முடியாது.

துரதிஸ்டவசமாக ஜெனிவா கடந்த காலத்தில் உச்ச வகையில் பயன்படுத்தப்பட்டது எனக் கூற முடியாது. இதற்காக எந்தப் பயன்பாடும் இருக்கவில்லை என இக்கட்டுரையாளர் கூறவரவில்லை. போதியளவு இல்லை என்றே கூற வருகின்றார.; தாயக அரசியலின் பலவீனமே உச்ச வகையில் பயன்படுத்த முடியாமைக்கு பிரதான காரணம் எனலாம். எனவே ஜெனிவாவை உச்ச வகையில் பயன்படுத்த வேண்டுமானால் முதலில் மேற்கொள்ள வேண்டிய பணி தாயக அரசியலை சீர் செய்வதே! அண்மைக்காலமாக தாயக அரசியல் “சாண் ஏற முழம் சறுக்கும்” நிலையாகவே உள்ளது. தாயகத்தில் அரசியல் கட்சிகளும் பலவீனமான நிலையில் உள்ளன. சிவில் அமைப்புகளும் பலவீனமாக உள்ளன.

சிவில் அமைப்புகள் பலவீனத்தால் அரசியல் கட்சிகள் “கொம்பிலை கயிறு சுற்றி விடப்பட்ட மாடுகள் போலவே உள்ளன” “கொம்பிலை கயிறு சுற்றி விடப்பட்ட மாடுகள”; தாங்கள் நினைத்தது போலவே மேயும். அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் எதுவும் இல்லை

  2009 இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய அரசியல் முழுமையாக அரசியல் கட்சிகளிடம் சென்றதே இதற்கு காரணம். ஒரு வலுவான அரசியல் இயக்கத்தை உருவாக்கி பலப்படுத்தாமல் இந்தப்போக்கில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது. அரசியல் கட்சிகள் வினைத்திறனுடன் ஒருபோதும் தமிழ் அரசியலைக் கொண்டு செல்லப் போவதில்லை.

 இன்னோர் பக்கத்தில் தேசிய மக்கள் சக்தி தமிழ் தேசிய அரசியலை அகரீதியாக சிதைக்கும் முயற்சிகளில் முழு வீச்சாக இறங்கியுள்ளது. 2009க்கு பின்னர் அகரீதியாக சிதைப்பதில் பலதரப்புகள் முனைந்த போதும் எவருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தி இதற்கு விதிவிலக்காக இருக்கும் போலவே தெரிகின்றது

தமிழ்த்தேசிய சக்திகள் முன்னெபோதையும் விட மிக அவதானமாக செயல்பட வேண்டிய காலம் இப்போது உருவாகியுள்ளது. 100 வருடங்களுக்கு மேலான ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமும், அது கட்டி வளர்த்த அரசியலும் நீர்த்துப்போகும் நிலை வருமா? என கவலை கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 “நதியினை பின்னோக்கிச் செல்ல விடலாமா? இதுதான் இன்றைய முக்கிய கேள்வி.


தமிழ் மக்களுக்கு உலகம் அமைத்துக் கொடுத்த சர்வதேச மேடையே ஜெனீவா - சி. அ. யோதிலிங்கம் தமிழ் மக்களுக்கு உலகம் அமைத்துக் கொடுத்த சர்வதேச மேடையே ஜெனீவா ஜெனிவா என  அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான  சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் அதன் முழு விபரமும் வருமாறுஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி 24 ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. இக்கூட்டத் தொடர் ஏப்பிரல் 07 திகதி வரை நடைபெற இருக்கின்றது. கடந்த 25 ம் திகதி இலங்கையின் வெளிநாட்டமைச்சர் விஜித ஹெரத் உரையாற்றியுள்ளார். முதல் மூன்று நாட்களும் உலக நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றியுள்ளனர.; மார்ச் 03 ம்; திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை வெளியிடுவார். அதன் பின்னர் பல்வேறு உறுப்பு நாடுகளும் தத்தமது நிலைப்பாட்டை தெரிவிக்கும். தொடர்ந்து சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளும் உரையாற்றுவர்.ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் தனது ஆரம்ப உரையில் இலங்கை தொடர்பாக எதுவும் கூறவில்லை. ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகம் காணாமல் போனவர்களது உறவுகளின் போராட்டங்களும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கருத்துக்களும் சர்வதேச செயற்பாடுகளில் பங்கேற்பவர்களின் கருத்துக்களும், இலங்கை விவகாரத்தில் உலக அவதானத்தை குவித்துள்ளது என தெரிவித்துள்ளது. இனி வாய்மூல அறிக்கையில் இலங்கை தொடர்பான அவரது நிலைப்பாடுகள் வெளிவரும்இலங்கை வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹெரத்தின்; உரையில் எதிர்பார்த்தவைகள் தான் வெளிப்பட்டுள்ளன. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை பொறுப்பு கூறல் விவகாரத்தில் முக்கிய செயல்பாடாக கூறியதோடு வடக்கு உட்பட நாடு தழுவிய ரீதியில் மக்கள் தந்த ஆணை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இவை தவிர பொறுப்புக் கூறல் தொடர்பாக காத்திரமான உறுதி மொழிகளையோ, நல்லிணக்கம் தொடர்பாக காத்திரமான செயல் திட்டங்களையோ அவர் முன்வைக்கவில்லை. உண்மையில் பொறுப்புக்கூறல் தொடர்பாகவோ நல்லிணக்கம் தொடர்பாகவோ முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எவற்றையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுக்கப் போவதில்லை. அதற்கான துணிவும், மனவிருப்பும் அதனிடம் இருப்பதாக கூறிவிட முடியாது. போர்க்குற்றங்கள் என்பவை சிறீலங்கா அரசின் தீர்மானங்களாகும. அரசின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பே அரசாங்கங்களுக்கு உள்ளதால் ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கங்களும் வெளி அழுத்தங்களின்றி வினைத்திறனான செயல்பாடுகளை முன்னெடுக்க மாட்டா. இது ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும் தெரியும். அதற்குப் பின்னால் உள்ள மேற்குலகத்திற்கும் தெரியும், சர்வதேச அரசியலே சர்வதேச நீதியாக இருப்பதனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கையிலும் பெரிதாக எதுவும் இருக்காது. முன்னைய தீர்மானங்களை நினைவூட்டுவதும் அதனை நிறைவேற்றும்படி வேண்டுகோள் விடுப்பதுமே பிரதானமாக இருக்கும். அதைவிட இராஜதந்திரிகளின் உரையில் வழமையாக இருக்கின்ற நல்ல விடயங்களை மெச்சுவதும், குறைபாடுகளை நோகாத வகையில் சுட்டிக்காட்டி வேண்டுகோள் விடுப்பதும் இருக்கும்தமிழ் மக்களுக்கு இதில் சார்பாக இருக்கப் போகின்ற விடயம் ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான கோவையை மூடாமல் இருப்பது தான். புவிசார் அரசியல் போட்டியும், பூகோள அரசியல் போட்டியும் இலங்கையில் தொடர்ந்து இருக்கும் வரை கோவையை மூடப் போவதில்லை. தெளிவாகக் கூறுவதாயின் இலங்கையில் சீனப் பிரசன்னம் இருக்கும் வரை கோவை மூடப்படாது. இலங்கை தொடர்பாக மேற்குலகத்திற்கும் சீனாவுக்;கும் இடையிலான போட்டியின் உயர்வு தாழ்வுக்கு ஏற்ப அழுத்தங்களின் உயர்வு தாழ்வுகளும் இருக்கும். அதுவரை விவகாரம் அடுத்த கட்டத்திற்கு நகராது. அடுத்த கட்டம் என்பது சிறீPலங்கா அரசாங்கம் மீது வன்மையான அழுத்தங்களை கொண்டு வருவது தான். இது குற்றவியல் நீதிமன்றத்திற்கு விவகாரத்தை கொண்டு செல்வதாகவோ, நாடுகள் தங்கள் தங்கள் நீதிமன்றங்களில் நடவடிக்கைகளை எடுப்பதாகவோ இருக்கும். இதன் உயர்நிலை என்பது பொருளாதாரத் தடைகளாக இருக்கும். இலங்கை தீவு முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வருமானால் இந்த அடுத்த கட்டத்தை நோக்கி மேற்குலகம் நகரும்.தற்போதைய நிலையில் அமெரிக்கா மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகியுள்ளமையும் மென் அழுத்தத்தை வலுவிழக்கச் செய்யும். அமெரிக்காவைப் போல தற்போது பொறுப்பேற்றிருக்கும் பிரிட்டன் வினைத் திறனுடன் செயல்படும் என கூற முடியாது. தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவை மேற்கொள்ளும் உருப்படியான விடயம் சாட்சிய சேகரிப்பு தான. அது வலுவான வினைத்திறனுடன் இடம்பெறுகின்றது  என கூற முடியாது. எனினும் பேரவை அதனை கைவிடப்போவதில்லை. தமிழ் மக்களை பொறுத்தவரை இது சற்று ஆறுதலான விடயம் தான். இந்த விவகாரத்தில் இந்தியக் குறுக்கீடுகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. போர்க்குற்ற விசாரணையை இந்தியா பெரியளவிற்கு விரும்பவில்லை. போர்க்குற்ற விசாரணையை நீட்சி செய்ய முயன்றால் இந்தியாவும் அதற்குள் மாட்டுப்பட வேண்டிவரும. இந்திய அமைதிப்படை கால குற்றங்கள் தவிர இறுதிப்போரக்காலத்திலும் இந்தியாவின் பங்கு கணிசமாக இருந்தது. முழுமையான விசாரணை நடாத்தின் அவையும் வெளி வரலாம். இவற்றை விட இந்தியா தனது சொந்த நாட்டில் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் கொஞ்சநஞ்சமல்ல. காஸ்மீர் தொடக்கம் வடகிழக்கு மாநிலங்களான அசாம,  மணிப்பூர், நாகலாந்து வரை அவை பரவி இருக்கின்றது. சிறீPலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கு அழுத்தம் கொடுத்தால் அவை பற்றியும் விசாரிக்க வேண்டிய நிலை வரும் என இந்தியா அஞ்சலாம். இதனால் இலங்கையின் பொறுப்புக் கூறல் விடயத்தில் காத்திரமான எவற்றையும் இந்தியா செய்யப்போவதில்லை.நல்லிணக்க செயற்பாட்டிலும் இந்தியா 13-வது திருத்தத்திற்கு மேல் நகராது. தற்போது இந்தியா சீனாவுக்கு போட்டியாக தனக்கான தளங்களை கைப்பற்ற நினைப்பதால் சிறீலங்கா அரசுடன் பகைமை உறவினைப் பின்பற்றாது. அதேபோல “இலங்கை தொடர்பான தனது வெளிநாட்டுக்கொள்கையில் இலங்கையின் ஆள்புல மேன்மை இறைமை என்பதை பேணுவதோடு தமிழர்களின் சமத்துவம் பேணப்பட வேண்டும”; என்பதையும் கைவிடாது. சீனாவின் மேலாதிக்கம் இலங்கை தீவில் உறுதிப்படும் வரை தமிழரின் சமத்துவம் பேணல் என்ற கொள்கை வெறும் கறி வேப்பிலையாகத்தான் இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய துணை ஸ்தானிகர் தமிழ் மக்கள் மீதான இந்தியாவின் அக்கறை நிரந்தரமானது என புகழந்;தாலும் அவை பெறும் வார்த்தைகள் தான். இவ்வளவு காலமும் இன முரண்பாட்டு விவகாரத்தில் தான் மட்டுமே சம்பந்தப்பட வேண்டும் என்ற நிலைக்கு அச்சுறுத்தல் சீனாவின் தேசிய இனங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரின் வருகையுடன் பின்னுக்குப் போகப் போகின்றது. “நிரந்தரமானது” என்ற வார்த்தை பிரயோகம் இந்தியத் துணை ஸ்தானிகரால் இந்த வருகையை உட்டித்தான் பயன்படுத்தப்பட்டதுதமிழ் அரசியல்வாதிகள் தமது சொந்த நலன்; காரணமாக இந்தியாவிடம் நம்பிக்கை வைப்பதாகக்கூறினாலும் தமிழ் மக்களிடம் அந்த நம்பிக்கை எதுவும் கிடையாது. தமிழ் மக்கள் இந்தியாவினால் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்றே கருதுகின்றார்கள். தற்போது தமிழ் அரசியல்வாதிகளும் பெரியளவிற்கு இந்தியாவின் பிடியில் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை இந்தியா விரும்பவில்லை. இந்தியா பல வழிகளினாலும் தமிழ் அரசியல்; வாதிகளுக்கு அழுத்தம் கொடுத்த போதும் தமிழ் அரசியல்வாதிகள் பலர் நழுவியே உள்ளனர். இந்தியா சஜித் பிறேமதாசா வெல்வதையே விரும்பியிருந்தது. அதற்காக சகல வழிகளிலும் செயல்பட்டது. தற்போது தமிழ் அரசியல் தங்களது பிடிக்குள் இல்லாததினால் மலையக அரசியலை வளைக்கும் முயற்சி நடைபெறுகின்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரசிலும் இந்திய செல்வாக்கு அபரிதமாக உள்ளதுதமிழ்த்தரப்பின் ஜெனிவா தொடர்பான அக்கறையும் செயற்பாடுகளும் அண்மைக்காலமாக குறைந்தே வருகின்றது. பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கில் அதிக ஆசனங்களை பெற்றுக் கொண்டமை, ஒருங்கிணைந்த தமிழ் அரசியல் இல்லாமை, பிரதான தமிழ்க் கட்சியான தமிழரசுக் கட்சியின் உட்கட்சி சண்டை, புலம்பெயர் தரப்பில் நிலவும் குழு அரசியல் என்பன இதற்கு காரணங்களாக இருக்கலாம். ஜெனிவாவின் முக்கியத்துவத்தினை அறிவியல் ரீதியாக புரிந்து கொள்ளாமையையும் இதற்குள் அடக்கலாம்இவ்வளவு காலமும் தமிழ்த் தரப்பு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பிரதான கூட்டங்களில் உரையாற்றுதல் உப கூட்டங்களை நடாத்துதல், போராட்டங்களை நடாத்துதல், போர் அவலம் பற்றிய கண்காட்சிகளை நடாத்துதல் என பங்களிப்புச் செய்திருந்தது. பிரதான கூட்டங்களில் நாடுகள் என்ற ரீதியில் பங்கு பற்ற முடியாவிட்டாலும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் மூலம் தமிழ்த்; தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் உரையாற்றியிருந்தார். இதைவிட தமிழக மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழ் மக்களுக்காக உரையாற்றியிருந்தனர். உப கூட்டங்களில் பங்கு பற்றுதல் கணிசமானளவு இடம்பெற்றிருந்தமை சர்வதேச மயப்படுத்த உதவி இருந்தது. போர் அவல கண்காட்சிகளும் சர்வதேச சக்திகளின் கவனத்தைப் பெற்றிருந்தன. போராட்டங்களும் பல தடவைகள் இடம்பெற்றிருந்தமை வலுவான கவனத்தைப் பெற்றிருந்தன.ஜெனிவா தமிழ் மக்களைப் பொறுத்தவரை பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் முதலாவது அது தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளி உலகத்திற்கு கொண்டு செல்வதற்கு கிடைத்த மிகப்பெரிய சர்வதேச மேடையாக உள்ளது. ஒருவகையில் தமிழ் மக்களுக்காக சர்வதேசம் அமைத்துக் கொடுத்த மேடை எனலாம். ஜெனிவா கூட்டங்களின் போது முழு உலகத்தின் கவனமும் ஜெனிவா பக்கம் திரும்பியிருக்கும். தேசிய பிரச்சினை சாராம்சத்தில் சர்வதேசப் பிரச்சினை என்ற வகையில் ஜெனிவா இந்த இடத்தில் பெரிய பங்கினை தமிழ் அரசியலில் வகிக்கின்றது. இதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் தற்போது சர்வதேசத்தின் அவதானத்தை பெற்றுள்ளது என அது கூறியிருக்கின்றது.ஜெனிவா தமிழ்த்தரப்பு சர்வதேச ரீதியாக உறவுகளைப் பலப்படுத்த உதவுகின்றது. நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வதேச சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சர்வதேச ஊடகவியலாளர்கள் என உறவுகளையும் தொடர்புகளையும் வலுப்படுத்த உதவுகின்றது. சர்வதேச மயப்படுத்தலுக்கு தொடர்புகள் மிகவும் அவசியமானவையாகும்.மூன்றாவது நட்பு சக்திகளை அடையாளம் காணவும், தமிழ் மக்களின் அரசியல் தொடர்பாக அவர்களை அணிதிரட்டவும் ஜெனிவா முக்கிய களமாகின்றது. இக்கட்டுரையாளர் அடிக்கடி கூறுகின்ற விடயம் தமிழ் மக்கள் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனம். அது தனது அக ஆற்றலை மட்டும் வைத்துக் கொண்டு முன்னேறிச் செல்ல முடியாது. புற ஆற்றலையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். புற ஆற்றலை தருவதில் முக்கியமானவர்கள் உலகத் தமிழர்களும், உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகளும் தான். இங்கே உலக முற்போக்கு ஜனநாயக சக்திகள் தமிழ் மக்களின் நல்ல நட்புச்சக்திகள். இந்த நட்புச் சக்திகளை அடையாளம் காணவும் அணி திரட்டவும் ஜெனிவா முக்கிய களமாகின்றது.நான்காவது நிலமும், புலமும், தமிழகமும் ஒருங்கிணைவதற்கும் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுப்பதற்கும் ஜெனிவா வலிமையான வாய்ப்புகளை கொடுக்கின்றது. இந்த மூன்று தரப்பும் சந்திக்கின்ற களமாக ஜெனிவா உள்ளது. ஒருவகையில் ஜெனிவாவை அனைத்துலக தமிழ்த்; தேசிய சக்திகளும், ஆர்வலர்களும் சந்;திக்கும் மையம் எனலாம். நிலமும், புலமும், தமிழகமும் ஒருங்கிணையாமல் தமிழ் அரசியலை ஒருபோதும் முன்நகரத்த முடியாது.துரதிஸ்டவசமாக ஜெனிவா கடந்த காலத்தில் உச்ச வகையில் பயன்படுத்தப்பட்டது எனக் கூற முடியாது. இதற்காக எந்தப் பயன்பாடும் இருக்கவில்லை என இக்கட்டுரையாளர் கூறவரவில்லை. போதியளவு இல்லை என்றே கூற வருகின்றார.; தாயக அரசியலின் பலவீனமே உச்ச வகையில் பயன்படுத்த முடியாமைக்கு பிரதான காரணம் எனலாம். எனவே ஜெனிவாவை உச்ச வகையில் பயன்படுத்த வேண்டுமானால் முதலில் மேற்கொள்ள வேண்டிய பணி தாயக அரசியலை சீர் செய்வதே அண்மைக்காலமாக தாயக அரசியல் “சாண் ஏற முழம் சறுக்கும்” நிலையாகவே உள்ளது. தாயகத்தில் அரசியல் கட்சிகளும் பலவீனமான நிலையில் உள்ளன. சிவில் அமைப்புகளும் பலவீனமாக உள்ளன.சிவில் அமைப்புகள் பலவீனத்தால் அரசியல் கட்சிகள் “கொம்பிலை கயிறு சுற்றி விடப்பட்ட மாடுகள் போலவே உள்ளன” “கொம்பிலை கயிறு சுற்றி விடப்பட்ட மாடுகள”; தாங்கள் நினைத்தது போலவே மேயும். அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் எதுவும் இல்லை  2009 இல் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த்தேசிய அரசியல் முழுமையாக அரசியல் கட்சிகளிடம் சென்றதே இதற்கு காரணம். ஒரு வலுவான அரசியல் இயக்கத்தை உருவாக்கி பலப்படுத்தாமல் இந்தப்போக்கில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது. அரசியல் கட்சிகள் வினைத்திறனுடன் ஒருபோதும் தமிழ் அரசியலைக் கொண்டு செல்லப் போவதில்லை. இன்னோர் பக்கத்தில் தேசிய மக்கள் சக்தி தமிழ் தேசிய அரசியலை அகரீதியாக சிதைக்கும் முயற்சிகளில் முழு வீச்சாக இறங்கியுள்ளது. 2009க்கு பின்னர் அகரீதியாக சிதைப்பதில் பலதரப்புகள் முனைந்த போதும் எவருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தி இதற்கு விதிவிலக்காக இருக்கும் போலவே தெரிகின்றதுதமிழ்த்தேசிய சக்திகள் முன்னெபோதையும் விட மிக அவதானமாக செயல்பட வேண்டிய காலம் இப்போது உருவாகியுள்ளது. 100 வருடங்களுக்கு மேலான ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமும், அது கட்டி வளர்த்த அரசியலும் நீர்த்துப்போகும் நிலை வருமா என கவலை கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. “நதியினை பின்னோக்கிச் செல்ல விடலாமா இதுதான் இன்றைய முக்கிய கேள்வி.

Advertisement

Advertisement

Advertisement