• May 10 2025

சீனாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்த ஜெர்மன் பெண் கைது!

Chithra / May 9th 2025, 3:48 pm
image

 

ரஷ்ய தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினி ஒன்றை வைத்து சென்ற சம்பவம் தொடர்பாக, ஜெர்மன் இளம்பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இளம்பெண்ணிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், மடிக்கணினியின் கடவுச்சொல்லை பொலிஸாருக்கு வழங்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சந்தேக நபரான இளம்பெண் சீனாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்த ஜெர்மன் பெண் கைது  ரஷ்ய தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினி ஒன்றை வைத்து சென்ற சம்பவம் தொடர்பாக, ஜெர்மன் இளம்பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான இளம்பெண்ணிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், மடிக்கணினியின் கடவுச்சொல்லை பொலிஸாருக்கு வழங்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், சந்தேக நபரான இளம்பெண் சீனாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement