கிளிநொச்சி மக்களுக்காக ஜேர்மன் நாட்டில் வசிக்கும் பெண்ணொருவர் இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை அமைத்துக் கொடுத்துள்ளதுடன், தற்போது மூன்றாவதாக முருகன் ஆலயம் ஒன்றையும் அமைக்கும் பணியில ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள கிராமங்களில் ஒன்றான ஊற்றுப்புலம் கிராமத்தில் வசிக்கின்ற மக்களின் நலன் கருதி பல்வேறு சமூக,சமய பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், ஊற்றுப்புலம் பாடசாலைக்கும் மற்றும் மாணவர்களின் கல்விக்கும் என பல உதவிகளை மேற்கொண்டுள்ளார்.
சமய பணிகளின் பொருட்டு சில வருடங்களுக்கு முன் ஊற்றுப்புலம் கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றை அமைத்துக்கொடுத்த அவர் பின்னர் ஊற்றுப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை பல மில்லியன் ரூபா செலவில் அமைத்துக் கொடுத்ததோடு ஆலயத்திற்கு தேவையான விக்கிரகங்களை இந்தியாவிலிருந்து கொண்டு வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது இக் கிராமத்தில் பல வருடங்களாக கவனிப்பாரற்று காணப்பட்ட முருகன் ஆலயத்தை தற்போது பல மில்லியன்கள் செலவு செய்து அமைக்கும் பணிகளை கடந்த வாரம் ஆரம்பித்துள்ளார்.
இந்த ஆலயத்திற்கான விக்கிரகங்களையும் இந்தியாவிலிருந்து கொண்டுவரும் நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.
தங்கள் கிராமத்திற்கான ஆழகான ஒரு ஆலயத்தை அமைத்துக் கொள்ளும் பொருளாதார வலுவற்ற நிலையில் உள்ள மக்களுக்காக குறித்த பெண் மேற்கொள்ளும் பணியினை பொதுமக்கள் உட்பட சமூக , சமய பணியார்கள் பலரும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.
கிளிநொச்சி மக்களுக்காக ஜேர்மன் பெண்மணி செய்த நெகிழ்ச்சியான செயல். கிளிநொச்சி மக்களுக்காக ஜேர்மன் நாட்டில் வசிக்கும் பெண்ணொருவர் இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களை அமைத்துக் கொடுத்துள்ளதுடன், தற்போது மூன்றாவதாக முருகன் ஆலயம் ஒன்றையும் அமைக்கும் பணியில ஈடுபட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள கிராமங்களில் ஒன்றான ஊற்றுப்புலம் கிராமத்தில் வசிக்கின்ற மக்களின் நலன் கருதி பல்வேறு சமூக,சமய பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், ஊற்றுப்புலம் பாடசாலைக்கும் மற்றும் மாணவர்களின் கல்விக்கும் என பல உதவிகளை மேற்கொண்டுள்ளார்.சமய பணிகளின் பொருட்டு சில வருடங்களுக்கு முன் ஊற்றுப்புலம் கிராமத்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றை அமைத்துக்கொடுத்த அவர் பின்னர் ஊற்றுப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை பல மில்லியன் ரூபா செலவில் அமைத்துக் கொடுத்ததோடு ஆலயத்திற்கு தேவையான விக்கிரகங்களை இந்தியாவிலிருந்து கொண்டு வந்துள்ளார்.இதனை தொடர்ந்து தற்போது இக் கிராமத்தில் பல வருடங்களாக கவனிப்பாரற்று காணப்பட்ட முருகன் ஆலயத்தை தற்போது பல மில்லியன்கள் செலவு செய்து அமைக்கும் பணிகளை கடந்த வாரம் ஆரம்பித்துள்ளார். இந்த ஆலயத்திற்கான விக்கிரகங்களையும் இந்தியாவிலிருந்து கொண்டுவரும் நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.தங்கள் கிராமத்திற்கான ஆழகான ஒரு ஆலயத்தை அமைத்துக் கொள்ளும் பொருளாதார வலுவற்ற நிலையில் உள்ள மக்களுக்காக குறித்த பெண் மேற்கொள்ளும் பணியினை பொதுமக்கள் உட்பட சமூக , சமய பணியார்கள் பலரும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.