• Jan 11 2025

இலங்கையில் தங்கத்தின் விலையில் தொடரும் மாற்றம் - டொலரின் இன்றைய நிலவரம்

Chithra / Jan 2nd 2025, 2:39 pm
image

 

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அண்மையில் சடுதியாக குறைவடைந்த தங்க விலை நேற்று (01) அதிகரித்த நிலையில் இன்று (02) மீண்டும் உயர்வடைந்துள்ளது.

இன்றைய  நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 774,833 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 27,340 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண்  218,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்க கிராம் 25,070 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 200,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,930 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 191,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 210,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 194,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 297.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.96 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 310.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199.66 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 208.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177.65 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 186.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் தொடரும் மாற்றம் - டொலரின் இன்றைய நிலவரம்  இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.அண்மையில் சடுதியாக குறைவடைந்த தங்க விலை நேற்று (01) அதிகரித்த நிலையில் இன்று (02) மீண்டும் உயர்வடைந்துள்ளது.இன்றைய  நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 774,833 ரூபாவாக காணப்படுகின்றது.அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 27,340 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண்  218,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.22 கரட் தங்க கிராம் 25,070 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் 200,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,930 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 191,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 210,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 194,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 297.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.இதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.96 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 310.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199.66 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 208.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177.65 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 186.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement