• May 21 2024

இலங்கையில் வீழ்ச்சியடைந்த வேகத்தில் அதிகரிக்கும் தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம் SamugamMedia

Chithra / Mar 13th 2023, 11:42 am
image

Advertisement

இலங்கையில் தங்கப்பவுணொன்றின் விலையானது ஒரே வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்திருந்த நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்த வேகத்தில் உயர்ந்து வருகிறது. 

அதன்படி கடந்த 9ஆம் திகதியை விட, பத்தாம் திகதி 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 10,000 ரூபாவால் அதிகரித்திருந்ததாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியிருந்தது. 

குறித்த தினத்தில் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 165,000 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 152,700 ரூபாவாக பதிவாகியிருந்தது. 


இவ்வாறான நிலையில் கொழும்பு செட்டியார்தெருவில் இன்றைய தினம் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இலங்கையில் வீழ்ச்சியடைந்த வேகத்தில் அதிகரிக்கும் தங்கத்தின் விலை இன்றைய நிலவரம் SamugamMedia இலங்கையில் தங்கப்பவுணொன்றின் விலையானது ஒரே வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைந்திருந்த நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்த வேகத்தில் உயர்ந்து வருகிறது. அதன்படி கடந்த 9ஆம் திகதியை விட, பத்தாம் திகதி 24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 10,000 ரூபாவால் அதிகரித்திருந்ததாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி மீண்டும் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியிருந்தது. குறித்த தினத்தில் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 165,000 ரூபாவாக பதிவாகியிருந்ததுடன், 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 152,700 ரூபாவாக பதிவாகியிருந்தது. இவ்வாறான நிலையில் கொழும்பு செட்டியார்தெருவில் இன்றைய தினம் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றமே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாகும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement