• Nov 13 2025

மீண்டும் மளமளவென உயரும் தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் இலங்கையர்கள்

Chithra / Nov 11th 2025, 8:09 pm
image


உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. 

இதன்படி கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் 9 ஆயிரம் ரூபாயினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இன்று மாத்திரம் தங்கம் 7000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, 

24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 325,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 

அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 300,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,575 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 

இதேவேளை, வெள்ளி ஒரு கிராமின் விலை 800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும், இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மீண்டும் மளமளவென உயரும் தங்கத்தின் விலை; அதிர்ச்சியில் இலங்கையர்கள் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. இதன்படி கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் 9 ஆயிரம் ரூபாயினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.இன்று மாத்திரம் தங்கம் 7000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 325,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 300,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,575 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை, வெள்ளி ஒரு கிராமின் விலை 800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும், இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement