அம்பாறை காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில், 49 கிலோ நிறையுடைய பல கோடி ரூபா பெறுமதியானது என நம்பப்படும் நீல ஹெலவள்ளா மீன் சிக்கியுள்ளது.
49 கிலோ நிறையுடைய பெரிய கண் மற்றும் நீல நிற வர்ணங்களை கொண்டுள்ள குறித்த மீனை விற்பனை செய்வதற்கான முயற்சியில் மீனவர்கள் இறங்கியுள்ளனர்.
அதேவேளை, கடும் போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்ட குறித்த மீன் இனங்கள் 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்தும் பெறுமதி மிக்கதாக உள்ளதாகவும், பாரிய மீன்களை கொள்வனவு செய்கின்ற நிறுவனங்களே இவ்வாறான மீன்களை அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
காரைதீவு மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம். வலையில் சிக்கிய பல கோடிகள். அம்பாறை காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில், 49 கிலோ நிறையுடைய பல கோடி ரூபா பெறுமதியானது என நம்பப்படும் நீல ஹெலவள்ளா மீன் சிக்கியுள்ளது.49 கிலோ நிறையுடைய பெரிய கண் மற்றும் நீல நிற வர்ணங்களை கொண்டுள்ள குறித்த மீனை விற்பனை செய்வதற்கான முயற்சியில் மீனவர்கள் இறங்கியுள்ளனர்.அதேவேளை, கடும் போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்ட குறித்த மீன் இனங்கள் 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்தும் பெறுமதி மிக்கதாக உள்ளதாகவும், பாரிய மீன்களை கொள்வனவு செய்கின்ற நிறுவனங்களே இவ்வாறான மீன்களை அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.