• May 04 2024

ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - இலங்கையில் பெருமளவில் குறைந்த கைத்தொலைபேசி விலைகள்..!samugammedia

mathuri / Apr 9th 2024, 8:26 pm
image

Advertisement

இலங்கையில் கைத்தொலைபேசிகளின்  விலைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளன. டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் கைத்தொலைபேசிகளின் விலை 18 தொடக்கதம் 20 வீதங்களால் குறைவடைந்துள்ளது. 

இந்த மகிழ்ச்சி செய்தியை இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து, கடந்த வருடத்தில் டொலர் பெறுமதி அதிகரித்திருந்த போது உயர்வடைந்திருந்த கைத்தொலைபேசிகளின் விலைகள் தற்போது மீண்டும் குறைவடைந்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 515,000 முதல் 530,000 ரூபா வரை காணப்பட்ட ஐபோன் 15 pro max கைத்தொலைபேசி விலை தற்போது 375,000 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக  சுட்டிக்காட்டியுள்ள சமித் செனரத் ஏனைய கைத்தொலைப்பேசிகளின் விலைகளும் பெருமளவில் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஐபோன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - இலங்கையில் பெருமளவில் குறைந்த கைத்தொலைபேசி விலைகள்.samugammedia இலங்கையில் கைத்தொலைபேசிகளின்  விலைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளன. டொலரின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் கைத்தொலைபேசிகளின் விலை 18 தொடக்கதம் 20 வீதங்களால் குறைவடைந்துள்ளது. இந்த மகிழ்ச்சி செய்தியை இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது நாட்டில் இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இதையடுத்து, கடந்த வருடத்தில் டொலர் பெறுமதி அதிகரித்திருந்த போது உயர்வடைந்திருந்த கைத்தொலைபேசிகளின் விலைகள் தற்போது மீண்டும் குறைவடைந்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.குறிப்பாக 515,000 முதல் 530,000 ரூபா வரை காணப்பட்ட ஐபோன் 15 pro max கைத்தொலைபேசி விலை தற்போது 375,000 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக  சுட்டிக்காட்டியுள்ள சமித் செனரத் ஏனைய கைத்தொலைப்பேசிகளின் விலைகளும் பெருமளவில் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement