• May 12 2024

சுற்றுலாவை முடித்து நாடு திரும்பினார் கோட்டா!

Chithra / Jan 5th 2023, 10:26 am
image

Advertisement

தனிப்பட்ட விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (5) காலை நாடு திரும்பினார்.

இன்று முற்பகல் அவர் தமது குடும்பத்தினருடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரியவருகின்றது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார். மேலும் அவர் அமெரிக்காவிற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அவருடன் முன்னாள் முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷ, மகன் மற்றும் மருமகள் மற்றும் அவரது பேரக்குழந்தையும் ஆகியோரும் சென்றிருந்தனர்.

இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட பல மாத ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை ஒரு பெரிய கூட்டம் முற்றுகையிட்டதையடுது்து 2022 ஜூலை மாதம் நாட்டை விட்டு வெளியேறினார்.

73 வயதான அவர் சிங்கப்பூருக்கு சென்று தமது பதவி விலகலை அறிவித்தார்.

தாய்லாந்து பெங்கொக் விடுதியில் தமது மனைவியுடன் தங்கியிருந்த அவர் கடந்த 2022 செப்டம்பர் 2 ஆம் திகதி  நாடு திரும்பினார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துபாயின் தனியார் ‘ஃபேம் பார்க்’ பூங்காவில் அதன் உரிமையாளர் சைஃப் அஹமட் பெல்ஹாசா மற்றும் பல விலங்குகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ஃபேம் பார்க் என்பது ஐக்கிய அரபு இராச்சிய தொழிலதிபர் சைஃப் அஹ்மத் பெல்ஹாசாவுக்கு சொந்தமான ஒரு கவர்ச்சியான விலங்கின காட்சி சாலையாகும்.

அங்கு கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

சுற்றுலாவை முடித்து நாடு திரும்பினார் கோட்டா தனிப்பட்ட விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (5) காலை நாடு திரும்பினார்.இன்று முற்பகல் அவர் தமது குடும்பத்தினருடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரியவருகின்றது.இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார். மேலும் அவர் அமெரிக்காவிற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.அவருடன் முன்னாள் முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷ, மகன் மற்றும் மருமகள் மற்றும் அவரது பேரக்குழந்தையும் ஆகியோரும் சென்றிருந்தனர்.இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட பல மாத ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை ஒரு பெரிய கூட்டம் முற்றுகையிட்டதையடுது்து 2022 ஜூலை மாதம் நாட்டை விட்டு வெளியேறினார்.73 வயதான அவர் சிங்கப்பூருக்கு சென்று தமது பதவி விலகலை அறிவித்தார்.தாய்லாந்து பெங்கொக் விடுதியில் தமது மனைவியுடன் தங்கியிருந்த அவர் கடந்த 2022 செப்டம்பர் 2 ஆம் திகதி  நாடு திரும்பினார்.இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துபாயின் தனியார் ‘ஃபேம் பார்க்’ பூங்காவில் அதன் உரிமையாளர் சைஃப் அஹமட் பெல்ஹாசா மற்றும் பல விலங்குகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.ஃபேம் பார்க் என்பது ஐக்கிய அரபு இராச்சிய தொழிலதிபர் சைஃப் அஹ்மத் பெல்ஹாசாவுக்கு சொந்தமான ஒரு கவர்ச்சியான விலங்கின காட்சி சாலையாகும்.அங்கு கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement