• Sep 10 2024

ஜனாதிபதி தேர்தலில் நாமலுக்கு ஆதரவு தெரிவித்த கோட்டபாய ராஜபக்ச..!

Sharmi / Aug 14th 2024, 3:59 pm
image

Advertisement

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் களமிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ இன்று(14) காலை கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். 

இந்நிகழ்வில்  மஹிந்த ராஜபக்ச,கோட்டபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



ஜனாதிபதி தேர்தலில் நாமலுக்கு ஆதரவு தெரிவித்த கோட்டபாய ராஜபக்ச. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் களமிக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டார்.பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ இன்று(14) காலை கொழும்பு விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வில்  மஹிந்த ராஜபக்ச,கோட்டபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச குடும்பத்தினர் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement