• May 03 2024

குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க அரசு தீர்மானம்..!

Chithra / Dec 6th 2023, 10:16 am
image

Advertisement


பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து வரும் வெளிநாட்டு திறன்மிக்க தொழிலாளர்கள் பெற வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது வெளிநாட்டு திறன்மிக்க பணியாளர்கள் பெற வேண்டிய சம்பளம் சுமார் 26,200 பவுண்டுகள் எனவும், புதிய திட்டத்தின் கீழ் அதனை 38,700 பவுண்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர்ந்தோர் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்தோரின் வேலைவாய்ப்பு தொடர்பான விதிகளை கடுமையாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டப்பூர்வ குடியேற்றத்தில் தொழிலாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இடம்பெயர வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விதிகள் கடுமையாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி இந்தத் திட்டத்தை முன்வைத்திருந்தார்.

குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க அரசு தீர்மானம். பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து வரும் வெளிநாட்டு திறன்மிக்க தொழிலாளர்கள் பெற வேண்டிய குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தற்போது வெளிநாட்டு திறன்மிக்க பணியாளர்கள் பெற வேண்டிய சம்பளம் சுமார் 26,200 பவுண்டுகள் எனவும், புதிய திட்டத்தின் கீழ் அதனை 38,700 பவுண்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.புலம்பெயர்ந்தோர் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்தோரின் வேலைவாய்ப்பு தொடர்பான விதிகளை கடுமையாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சட்டப்பூர்வ குடியேற்றத்தில் தொழிலாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இடம்பெயர வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து விதிகள் கடுமையாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி இந்தத் திட்டத்தை முன்வைத்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement