• Nov 26 2024

வளமான நாடாக இந்த நாட்டை உருவாக்குவதற்கு அரச ஊழியர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் முன்வரவேண்டும்- பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு..!

Sharmi / Oct 5th 2024, 3:52 pm
image

'வளமான நாடாக இந்த நாட்டை உருவாக்குவதற்கு அரச ஊழியர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் முன்வரவேண்டும்' என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வு  இன்று(05) பாசிக்குடா வீதி கல்குடாவில் இடம்பெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தலுக்கு பின்னரான வன்முறையற்ற அமைதியான செயற்பாடாக இந்த தேர்தல் காணப்பட்டது.

இது உங்களினதும் எங்களினதும் முழுமையான ஒத்துழைப்பு மூலமாகவே இது காணப்பட்டது.

ஆகவே அமைதியான தேர்தலுக்கு பின்னரான செயற்பாட்டிற்கு உதவி புரிந்த அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் எதிர்பார்ப்பது எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான தேர்தல் செயற்பாடுகள் இடம்பெறும் போது அரச உத்தியோகத்தர்களாகிய உங்களது ஒத்துழைப்பு அவசியம் என கருதுகின்றேன்.

நான் கடந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் போது உங்களால் எனது கடமைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு கிடைத்தது.இதேபோன்று 2008,2009 காலப்பகுதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையாற்றினேன்.

இதன்போது 2017 ஆம் ஆண்டு இவ்விடம் கல்குடா பொலிஸ் நிலைய கட்டடம் அமைப்பதற்கு பொலிஸ் பிரிவிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.2020,2021 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இவ் நிலையத்தை அமைப்பதற்கு போதியளவு நிதி வசதி கிடைக்கவில்லை.

இருந்தபோதிலும் அப்போதைய காலகட்டத்தில் இருந்த பொலிஸ்மா அதிபருடன் இணைந்து நாங்கள் இந்த கட்டடத்தை அமைப்பதற்கு முழு மூச்சாக செயற்பட்டோம்.அதன் நிறைவாகவே இவ் பொலிஸ் நிலையத்தை நிர்மானித்தோம்.

இந்த நிலையத்தில் நிறைவான வசதிகள் இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் மேலும் முற்றும் முழுதான வசதிகளுடன் நிறைந்த நிலையமாக மாற்ற எதிர்பார்க்கின்றோம்.

மேலும் உங்களிடம் எதிர்பார்ப்பது அமைதியையும் சட்டத்தையும் மதித்து நீங்கள் செயற்படுவீர்களாயின் பொலிஸ் திணைக்கள உறுப்பினர்களாகிய நாங்கள் சினேகபூர்வமாக இணைந்து செயற்படுவோம்.

பாசிக்குடா எனும் வலயமானது சுற்றுலா பிரதேசமாக காணப்படுகிறது.அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வருகின்றனர்.

அவர்களுடைய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் எதிர்பார்க்கின்றோம்.

இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நாளாந்த செயற்பாடுகளையும் அவர்களுடைய நடவடிக்கைகளையும் உறுதி செய்வதற்கு நாங்கள் முழு மூச்சாக செயற்படுவோம்.பொலிசார் மீது நம்பிக்கை கொள்வீர்களாயின் உங்களது சமூகத்தில் வன்முறையற்ற ஒரு சமூதாயத்தை உருவாக்கி கொள்ளமுடியும் என்றார்.

இவ் பொலிஸ் நிலையமானது 608 ஆவது பொலிஸ் நிலையமாகும்.இன்றை நிகழ்வில் கிழக்கு மாகான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித்ரோகன உட்பட இராணுவ,கடற்படை உயர் அதிகாரிகள் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


வளமான நாடாக இந்த நாட்டை உருவாக்குவதற்கு அரச ஊழியர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் முன்வரவேண்டும்- பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு. 'வளமான நாடாக இந்த நாட்டை உருவாக்குவதற்கு அரச ஊழியர்களும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் முன்வரவேண்டும்' என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.கல்குடா பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வு  இன்று(05) பாசிக்குடா வீதி கல்குடாவில் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.தேர்தலுக்கு பின்னரான வன்முறையற்ற அமைதியான செயற்பாடாக இந்த தேர்தல் காணப்பட்டது.இது உங்களினதும் எங்களினதும் முழுமையான ஒத்துழைப்பு மூலமாகவே இது காணப்பட்டது.ஆகவே அமைதியான தேர்தலுக்கு பின்னரான செயற்பாட்டிற்கு உதவி புரிந்த அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.நான் எதிர்பார்ப்பது எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான தேர்தல் செயற்பாடுகள் இடம்பெறும் போது அரச உத்தியோகத்தர்களாகிய உங்களது ஒத்துழைப்பு அவசியம் என கருதுகின்றேன். நான் கடந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் போது உங்களால் எனது கடமைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு கிடைத்தது.இதேபோன்று 2008,2009 காலப்பகுதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையாற்றினேன்.இதன்போது 2017 ஆம் ஆண்டு இவ்விடம் கல்குடா பொலிஸ் நிலைய கட்டடம் அமைப்பதற்கு பொலிஸ் பிரிவிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.2020,2021 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இவ் நிலையத்தை அமைப்பதற்கு போதியளவு நிதி வசதி கிடைக்கவில்லை.இருந்தபோதிலும் அப்போதைய காலகட்டத்தில் இருந்த பொலிஸ்மா அதிபருடன் இணைந்து நாங்கள் இந்த கட்டடத்தை அமைப்பதற்கு முழு மூச்சாக செயற்பட்டோம்.அதன் நிறைவாகவே இவ் பொலிஸ் நிலையத்தை நிர்மானித்தோம்.இந்த நிலையத்தில் நிறைவான வசதிகள் இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் மேலும் முற்றும் முழுதான வசதிகளுடன் நிறைந்த நிலையமாக மாற்ற எதிர்பார்க்கின்றோம்.மேலும் உங்களிடம் எதிர்பார்ப்பது அமைதியையும் சட்டத்தையும் மதித்து நீங்கள் செயற்படுவீர்களாயின் பொலிஸ் திணைக்கள உறுப்பினர்களாகிய நாங்கள் சினேகபூர்வமாக இணைந்து செயற்படுவோம்.பாசிக்குடா எனும் வலயமானது சுற்றுலா பிரதேசமாக காணப்படுகிறது.அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வருகின்றனர்.அவர்களுடைய பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் எதிர்பார்க்கின்றோம்.இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நாளாந்த செயற்பாடுகளையும் அவர்களுடைய நடவடிக்கைகளையும் உறுதி செய்வதற்கு நாங்கள் முழு மூச்சாக செயற்படுவோம்.பொலிசார் மீது நம்பிக்கை கொள்வீர்களாயின் உங்களது சமூகத்தில் வன்முறையற்ற ஒரு சமூதாயத்தை உருவாக்கி கொள்ளமுடியும் என்றார்.இவ் பொலிஸ் நிலையமானது 608 ஆவது பொலிஸ் நிலையமாகும்.இன்றை நிகழ்வில் கிழக்கு மாகான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித்ரோகன உட்பட இராணுவ,கடற்படை உயர் அதிகாரிகள் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின்பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement