• Sep 22 2024

நாளை அரச வைத்திய சங்க அதிகாரிகள் பாரிய ஆர்ப்பாட்டம்...!samugammedia

Anaath / Oct 10th 2023, 5:23 pm
image

Advertisement

நாளை  அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக   அரச மருத்துவ சங்கத்தின் ஊடக குழு உறுப்பினரான அன்பாஸ் பாருக் தெரிவித்துள்ளார்.

 குறித்த விடயம் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வைத்தியர்களுக்கு சொற்ப அளவிலான சம்பளம்தான்   வழங்கப்படுகின்றது. அத்துடன் வைத்தியர்கள்  இந்த நாட்டில் தொடர்ந்தும் வேலை செய்வதற்கு உகந்த சூழல் காணப்படாமல் இருக்கின்றமை என்பவை காரணமாக  இந்த நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்ககள்  இதன் காரணமாக இந்த நாட்டில் சுகாதார துறையில் பாரியதொரு நெருக்கடி  காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக நாங்கள் ஊடகங்களில் தெளிவுபடுத்தியிருந்தோம், ஊடகங்கள் வாயிலாக மக்களும் தெளிவு படுத்த பட்டிருக்கிறார்கள், இந்த நாட்டில் உள்ள அரசியல் வாதிகளும் இந்த பிரச்சினை தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள், அண்மையில் பாராளுமன்ற ஒத்திவைப்பில் கூட இது தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.  

எனவே இந்த நாட்டில் காணப்படுகின்ற இந்த வைத்தியர்கள் தொடர்பான இந்த பிரச்சினை சகலரும் அறிந்த பிரச்சினையாக இருந்த போதிலும் இது தொடர்பான பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான தீர்வுகள் உரிய தரப்பினரால் முன்வைக்கப்படக்கூடியதாக இருப்பது மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது.

நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களை தக்க வைத்து கொள்வதற்கான 8 யோசனைகள் அடங்கிய நடைமுறைச்சாத்தியமான முன்மொழிவுகள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ அமைச்சரோ சுகாதார அமைச்சரோ எந்தவீதமான முன்மொழிவுகளையோ எந்த விதமான சாதகமான பதிலையே தராமல் இருப்பது மிகவு கவலையடைய கூடிய விடயமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், வைத்தியர்களுக்கு என தனியாக ஒரு தனியான சம்பள கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும், வைத்தியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும், வைத்தியர்களுக்கு போக்குவரத்து மாற்று தங்கியிருந்தல் தொடர்பான இந்த  மானியம் மீள்திருத்தம் செய்யப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார யோசனைகள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட இதுவரை சுகாதார அமைச்சோ அல்லது சுகாதார அமைச்சரோ எந்த விதமான எந்த வித முடிவுகளும் எடுக்காததன் காரணமாக கடந்த ஒக்டோபர் மாநாட்டில் கடந்த வாரம் இடம் பெற்ற அரச மருத்துவ  அதிகாரிகள் சங்க மத்திய குழு கூட்டத்தில் ஏற்படுத்திய முடிவுகளின் படி  இன்றுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில் நாங்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் நாளைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்பாக மத்திய இடைவேளையின் போது  இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான வைத்தியர்கள், பிரதானமாக மேல்மாகாணத்தில் உள்ள வைத்தியர்கள் அனைவரும்  ஒன்று கோடி ஒரு மாபெரும்  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.






நாளை அரச வைத்திய சங்க அதிகாரிகள் பாரிய ஆர்ப்பாட்டம்.samugammedia நாளை  அரசாங்கத்துக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக   அரச மருத்துவ சங்கத்தின் ஊடக குழு உறுப்பினரான அன்பாஸ் பாருக் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வைத்தியர்களுக்கு சொற்ப அளவிலான சம்பளம்தான்   வழங்கப்படுகின்றது. அத்துடன் வைத்தியர்கள்  இந்த நாட்டில் தொடர்ந்தும் வேலை செய்வதற்கு உகந்த சூழல் காணப்படாமல் இருக்கின்றமை என்பவை காரணமாக  இந்த நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்ககள்  இதன் காரணமாக இந்த நாட்டில் சுகாதார துறையில் பாரியதொரு நெருக்கடி  காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக நாங்கள் ஊடகங்களில் தெளிவுபடுத்தியிருந்தோம், ஊடகங்கள் வாயிலாக மக்களும் தெளிவு படுத்த பட்டிருக்கிறார்கள், இந்த நாட்டில் உள்ள அரசியல் வாதிகளும் இந்த பிரச்சினை தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவு படுத்தியிருக்கிறார்கள், அண்மையில் பாராளுமன்ற ஒத்திவைப்பில் கூட இது தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.  எனவே இந்த நாட்டில் காணப்படுகின்ற இந்த வைத்தியர்கள் தொடர்பான இந்த பிரச்சினை சகலரும் அறிந்த பிரச்சினையாக இருந்த போதிலும் இது தொடர்பான பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான தீர்வுகள் உரிய தரப்பினரால் முன்வைக்கப்படக்கூடியதாக இருப்பது மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது.நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களை தக்க வைத்து கொள்வதற்கான 8 யோசனைகள் அடங்கிய நடைமுறைச்சாத்தியமான முன்மொழிவுகள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ அமைச்சரோ சுகாதார அமைச்சரோ எந்தவீதமான முன்மொழிவுகளையோ எந்த விதமான சாதகமான பதிலையே தராமல் இருப்பது மிகவு கவலையடைய கூடிய விடயமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். மேலும், வைத்தியர்களுக்கு என தனியாக ஒரு தனியான சம்பள கட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும், வைத்தியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும், வைத்தியர்களுக்கு போக்குவரத்து மாற்று தங்கியிருந்தல் தொடர்பான இந்த  மானியம் மீள்திருத்தம் செய்யப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் சுகாதார யோசனைகள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட இதுவரை சுகாதார அமைச்சோ அல்லது சுகாதார அமைச்சரோ எந்த விதமான எந்த வித முடிவுகளும் எடுக்காததன் காரணமாக கடந்த ஒக்டோபர் மாநாட்டில் கடந்த வாரம் இடம் பெற்ற அரச மருத்துவ  அதிகாரிகள் சங்க மத்திய குழு கூட்டத்தில் ஏற்படுத்திய முடிவுகளின் படி  இன்றுவரை எந்த முடிவுகளும் எடுக்கப்படாத நிலையில் நாங்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் நாளைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்பாக மத்திய இடைவேளையின் போது  இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான வைத்தியர்கள், பிரதானமாக மேல்மாகாணத்தில் உள்ள வைத்தியர்கள் அனைவரும்  ஒன்று கோடி ஒரு மாபெரும்  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement