• May 19 2024

கால்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்தது யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி...!samugammedia

Sharmi / Oct 10th 2023, 5:21 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கும் இடையிலான கால்பந்தாட்ட இறுதிப் போட்டி நேற்று(09) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இறுதியாட்டத்தில் தேசிய ரீதியில் பலம் வாய்ந்த கொழும்பு ஷாகிராக் கல்லூரியை  சமநிலை தவிர்ப்பு உதை மூலம் 04 : 03 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று அகில இலங்கை 20 வயதுப் பிரிவில் சம்பியனானது.

2022 , 2023 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் 20 வயதுப் பிரிவில் காற்பந்தாட்டத்தில் சம்பியனான ஒரே பாடசாலை சென் பற்றிக்ஸ் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் அணி தனது முதலாவது போட்டியில் அனுராதபுரம் நச்சடுவா முஸ்லீம் மகா  வித்தியாலயத்தை 07:00 என்ற கோல் கணக்கிலும், இரண்டாவது போட்டியில் கடயமுட்டை முஸ்லீம் மத்திய கல்லூரியை 03 : 01 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதியாட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் பலம் பொருந்திய மட்டக்களப்பு ஏறாவூர் அலிஹார் தேசிய பாடசாலையை 02 : 00 என்ற கோல் அடிப்படையிலும், அரையிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை 01 : 00 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில்   கொழும்பு ஷாகிராக் கல்லூரியை சமநிலை தவிர்ப்பு (Penalty)  உதைமூலம் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் வயதுப் பிரிவினர் 2018 ஆம் ஆண்டில் 16 வயதுப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகள் கால் பந்தாட்டத்தில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த அணி என்பது குறிப்பித்தக்கது.

கால்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்தது யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி.samugammedia யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் கொழும்பு ஷாகிராக் கல்லூரிக்கும் இடையிலான கால்பந்தாட்ட இறுதிப் போட்டி நேற்று(09) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இறுதியாட்டத்தில் தேசிய ரீதியில் பலம் வாய்ந்த கொழும்பு ஷாகிராக் கல்லூரியை  சமநிலை தவிர்ப்பு உதை மூலம் 04 : 03 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று அகில இலங்கை 20 வயதுப் பிரிவில் சம்பியனானது.2022 , 2023 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் 20 வயதுப் பிரிவில் காற்பந்தாட்டத்தில் சம்பியனான ஒரே பாடசாலை சென் பற்றிக்ஸ் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.இவ் அணி தனது முதலாவது போட்டியில் அனுராதபுரம் நச்சடுவா முஸ்லீம் மகா  வித்தியாலயத்தை 07:00 என்ற கோல் கணக்கிலும், இரண்டாவது போட்டியில் கடயமுட்டை முஸ்லீம் மத்திய கல்லூரியை 03 : 01 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதியாட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் பலம் பொருந்திய மட்டக்களப்பு ஏறாவூர் அலிஹார் தேசிய பாடசாலையை 02 : 00 என்ற கோல் அடிப்படையிலும், அரையிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை 01 : 00 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில்   கொழும்பு ஷாகிராக் கல்லூரியை சமநிலை தவிர்ப்பு (Penalty)  உதைமூலம் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.இவ் வயதுப் பிரிவினர் 2018 ஆம் ஆண்டில் 16 வயதுப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகள் கால் பந்தாட்டத்தில் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த அணி என்பது குறிப்பித்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement