• Mar 21 2025

நாடளாவிய ரீதியில் இன்று முதல் போராட்டத்தில் குதிக்கும் அரச தாதியர் சங்கத்தினர்!

Chithra / Mar 17th 2025, 7:31 am
image

 

நாடளாவிய ரீதியில் இன்று முதல் அரச தாதியர் சங்கத்தினர் 3 மணித்தியாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய வரவு செலவு திட்டத்தில் சுகாதார ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு இணையாக சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் என்பன குறைக்கப்பட்டுள்ளதுடன் தர உயர்வுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு அரசாங்கத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் இதுவரை எவ்வித தீர்வுகளும் வழங்கப்பட வில்லை.

தீர்வு வழங்குவதாக கூறி சுகாதார ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையின் போது சுகாதார அமைச்சர் எமக்களித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 

சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாகவே கடந்த 6 ஆம் திகதி தாதியர்களால் முன்னெடுக்கப்பட இருந்த தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எமக்களித்த வாக்குறுதியை உடைதெறிந்துள்ளார்.

ஆகையால் அரசாங்கத்தின் இச்செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் சகல அரச வைத்தியசாலைகளிலும்  தாதியர்கள் காலை 10.00 மணி தொடக்கம் நண்பகல் 1.00 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

நாடளாவிய ரீதியில் இன்று முதல் போராட்டத்தில் குதிக்கும் அரச தாதியர் சங்கத்தினர்  நாடளாவிய ரீதியில் இன்று முதல் அரச தாதியர் சங்கத்தினர் 3 மணித்தியாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய வரவு செலவு திட்டத்தில் சுகாதார ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு இணையாக சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் என்பன குறைக்கப்பட்டுள்ளதுடன் தர உயர்வுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு அரசாங்கத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் இதுவரை எவ்வித தீர்வுகளும் வழங்கப்பட வில்லை.தீர்வு வழங்குவதாக கூறி சுகாதார ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையின் போது சுகாதார அமைச்சர் எமக்களித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாகவே கடந்த 6 ஆம் திகதி தாதியர்களால் முன்னெடுக்கப்பட இருந்த தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எமக்களித்த வாக்குறுதியை உடைதெறிந்துள்ளார்.ஆகையால் அரசாங்கத்தின் இச்செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் சகல அரச வைத்தியசாலைகளிலும்  தாதியர்கள் காலை 10.00 மணி தொடக்கம் நண்பகல் 1.00 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now