• Jan 11 2025

மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் அரச சேவையை உருவாக்க வேண்டும்; வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு..!

Sharmi / Jan 10th 2025, 4:15 pm
image

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்படும் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றது. அதைச் சிறப்பாகச் செயற்படுத்த வேண்டும். மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையை உருவாக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை பொது மரக்கறிச் சந்தை இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் ரூபா செலவில் இந்தச் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையின் செயலர் திருமதி தாரணி கஜரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தனது உரையில்,

"பௌதீக வளங்களின் முன்னேற்றம் என்பது அபிவிருத்திக்கு இன்றியமையாதது. அதேபோன்று தனித்து பௌதீக வளங்களின் முன்னேற்றம் மாத்திரமும் அபிவிருத்தியாகிவிடாது. எங்களின் சேவையை மேம்படுத்தும்போதுதான் அபிவிருத்தி முழுயடையும். எனவே, மக்களுக்குத்  தரமான, அன்பான, விரைவான சேவையை வழங்க முன்வரவேண்டும்.

தற்போது எமக்குள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நகர சபையின் செயலர் ஆகியோர் இளையவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் உத்வேகத்துடனும் துடிப்புடனும் செயலாற்றுகின்றனர்.

இந்தப் பொதுச் சந்தைக்குரிய காணியைக் கொள்வனவு செய்து கட்டடம் அமைத்து இன்று மக்களுக்குக் கையளிக்கின்ற சபையின் செயலரையும் பணியாளர்களையும் பாராட்டுகின்றேன்.

இதேபோன்று திறம்பட பணியாற்றுவதுடன் எதிர்காலத்தில் இந்தப் பொதுச் சந்தையை பராமரிப்பதிலும்தான் இதன் வெற்றி தங்கியிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.





மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் அரச சேவையை உருவாக்க வேண்டும்; வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு. ஜனாதிபதியின் எண்ணக்கருவில் முன்னெடுக்கப்படும் 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு முக்கிய பங்கிருக்கின்றது. அதைச் சிறப்பாகச் செயற்படுத்த வேண்டும். மக்கள் நம்பிக்கை வைக்கும் அரச சேவையை உருவாக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை பொது மரக்கறிச் சந்தை இன்று திறந்து வைக்கப்பட்டது.ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் 45 மில்லியன் ரூபா செலவில் இந்தச் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை நகர சபையின் செயலர் திருமதி தாரணி கஜரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் தனது உரையில்,"பௌதீக வளங்களின் முன்னேற்றம் என்பது அபிவிருத்திக்கு இன்றியமையாதது. அதேபோன்று தனித்து பௌதீக வளங்களின் முன்னேற்றம் மாத்திரமும் அபிவிருத்தியாகிவிடாது. எங்களின் சேவையை மேம்படுத்தும்போதுதான் அபிவிருத்தி முழுயடையும். எனவே, மக்களுக்குத்  தரமான, அன்பான, விரைவான சேவையை வழங்க முன்வரவேண்டும்.தற்போது எமக்குள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர், நகர சபையின் செயலர் ஆகியோர் இளையவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் உத்வேகத்துடனும் துடிப்புடனும் செயலாற்றுகின்றனர்.இந்தப் பொதுச் சந்தைக்குரிய காணியைக் கொள்வனவு செய்து கட்டடம் அமைத்து இன்று மக்களுக்குக் கையளிக்கின்ற சபையின் செயலரையும் பணியாளர்களையும் பாராட்டுகின்றேன்.இதேபோன்று திறம்பட பணியாற்றுவதுடன் எதிர்காலத்தில் இந்தப் பொதுச் சந்தையை பராமரிப்பதிலும்தான் இதன் வெற்றி தங்கியிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement