• Jan 27 2025

காலத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை அரசாங்கம் துரித கதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் – ராமேஷ்வரன் தெரிவிப்பு

Chithra / Dec 31st 2024, 2:30 pm
image

 

புத்தாண்டில் புதுப் பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர், நிதி செயலாளரும், முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது புத்தாண்டுச் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பல்வேறு நம்பிக்கைகளுடன் இந்த புத்தாண்டை மக்கள் வரவேற்கின்றனர். அவர்களது நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் இப்புத்தாண்டில் நிறைவேற வேண்டும். 

மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும் கிடைத்திட வேண்டும் என்பதுடன் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி பெருகிட வேண்டும்.

பழைய ஆண்டு கற்றுத் தந்த பாடங்களில் இருந்து புதிய ஆண்டில் நாம் வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய கனவுகளோடு, நம்பிக்கைகளோடு புத்தாண்டை வரவேற்போம்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையும் அரசியல் தலைமைகளின் குறைகளையும் சுட்டிக்காட்டிக் கொண்டு காலத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை அரசாங்கம் துரித கதியில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மலையக மக்கள் இவ் அரசாங்கத்தின் மீது பாரிய எதிர்பார்ப்பினை முன்வைத்து தனது வாக்குகளை அளித்துள்ளார்கள். 

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்தல், அவர்களுக்கான கல்வி அபிவிருத்தி, காணி உரிமை என்பன அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட வேண்டும்.

அதற்கான தொடர் அழுத்தங்களை நாம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து வழங்குவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை அரசாங்கம் துரித கதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் – ராமேஷ்வரன் தெரிவிப்பு  புத்தாண்டில் புதுப் பொலிவை, புது வளர்ச்சியை, புதுச் சவால்களை, புது வெற்றிகளை எதிர்கொள்வோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளர், நிதி செயலாளரும், முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவர் தனது புத்தாண்டுச் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,பல்வேறு நம்பிக்கைகளுடன் இந்த புத்தாண்டை மக்கள் வரவேற்கின்றனர். அவர்களது நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் இப்புத்தாண்டில் நிறைவேற வேண்டும். மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும் கிடைத்திட வேண்டும் என்பதுடன் பொருளாதார ரீதியான நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி பெருகிட வேண்டும்.பழைய ஆண்டு கற்றுத் தந்த பாடங்களில் இருந்து புதிய ஆண்டில் நாம் வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய கனவுகளோடு, நம்பிக்கைகளோடு புத்தாண்டை வரவேற்போம்.கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையும் அரசியல் தலைமைகளின் குறைகளையும் சுட்டிக்காட்டிக் கொண்டு காலத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை அரசாங்கம் துரித கதியில் முன்னெடுக்கப்பட வேண்டும்.மலையக மக்கள் இவ் அரசாங்கத்தின் மீது பாரிய எதிர்பார்ப்பினை முன்வைத்து தனது வாக்குகளை அளித்துள்ளார்கள். மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்தல், அவர்களுக்கான கல்வி அபிவிருத்தி, காணி உரிமை என்பன அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட வேண்டும்.அதற்கான தொடர் அழுத்தங்களை நாம் அனைத்து தரப்பினருடனும் இணைந்து வழங்குவோம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now