• Sep 22 2024

இலங்கைக்கு பாரிய தொகையை கொண்டு வரும் அரசின் சமீபத்திய திட்டம்!

Chithra / Jan 29th 2023, 10:53 am
image

Advertisement

அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக பாரிய தொகையை இலங்கைக்கு கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் தலையீட்டின் ஊடாக இந்நாட்டின் பல திட்டங்களுக்காக பல பில்லியன்கள் பெரும் தொகை கொண்டுவரப்பட உள்ளது.

ஆயிரத்து முன்னூற்று ஒன்பது உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களும் நானூற்று எட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆயிரத்து எழுநூற்று பதினேழு அரச சார்பற்ற நிறுவனங்களும் ஏற்கனவே தேசிய அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்த அமைப்புகளால் செய்யப்படும் அனைத்து திட்டங்களும் இந்த அலுவலகத்தின் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. 

மேலும், இந்த அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படுகின்றன.

அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அந்த நிறுவனங்களின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு தேவையான பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ விமலகுணரத்ன தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகளை நெறிப்படுத்தி துரிதப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைக்கு பாரிய அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு பாரிய தொகையை கொண்டு வரும் அரசின் சமீபத்திய திட்டம் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக பாரிய தொகையை இலங்கைக்கு கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இவ்வாறாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் தலையீட்டின் ஊடாக இந்நாட்டின் பல திட்டங்களுக்காக பல பில்லியன்கள் பெரும் தொகை கொண்டுவரப்பட உள்ளது.ஆயிரத்து முன்னூற்று ஒன்பது உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களும் நானூற்று எட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆயிரத்து எழுநூற்று பதினேழு அரச சார்பற்ற நிறுவனங்களும் ஏற்கனவே தேசிய அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த அமைப்புகளால் செய்யப்படும் அனைத்து திட்டங்களும் இந்த அலுவலகத்தின் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. மேலும், இந்த அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படுகின்றன.அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அந்த நிறுவனங்களின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கு தேவையான பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சஞ்சீவ விமலகுணரத்ன தெரிவித்துள்ளார்.அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகளை நெறிப்படுத்தி துரிதப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைக்கு பாரிய அந்நிய செலாவணியை ஈட்ட முடியும் என அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement