• May 20 2024

12,000 பட்டதாரிகளுக்கு அடித்த அதிஸ்டம் - அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு

Chithra / Jan 8th 2023, 4:19 pm
image

Advertisement

தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக 12,000 பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான போட்டி பரீட்சை அடுத்த வாரம் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தல், விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் அழகியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, போட்டிப் பரீட்சையை விரைவாக நடத்தி ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக புதிய ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

12,000 பட்டதாரிகளுக்கு அடித்த அதிஸ்டம் - அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக 12,000 பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இது தொடர்பான போட்டி பரீட்சை அடுத்த வாரம் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார்.அத்துடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தல், விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது பாடசாலைகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் உட்பட அரச சேவையில் உள்ள 40 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் இதற்காக விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் அழகியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, போட்டிப் பரீட்சையை விரைவாக நடத்தி ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக புதிய ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement